திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் டிச. 30-ல் சொர்க்க வாசல் திறப்பு!
பாா்த்தசாரதி கோயிலில் சொர்க்கவாசல் திறப்பு நடைபெறுகிறது.
சென்னை திருவல்லிக்கேணி ஸ்ரீ பார்த்தசாரதி சுவாமி கோயிலில் சொர்க்க (பரமபத) வாசல் திறப்பு டிச. 30-ஆம் தேதி (செவ்வாய்க்கிழமை) நடைபெறுகிறது.
108 திவ்ய தேசங்களில் ஒன்றான திருவல்லிக்கேணியில் அமைந்துள்ள ஸ்ரீ பார்த்தசாரதி பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் வைகுண்ட ஏகாதசி உற்சவம் வெகுவிமரிசையாக நடைபெறும்.
ஸ்ரீரங்கம், திருப்பதி, காஞ்சிபுரம், அயோத்தி, சோளிங்கர் ஆகிய ஐந்து திவ்யதேசத்து பெருமான்கள் இந்தத் தலத்தில் தனித்தனி சந்நிதிகளில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.
Advertisement
Advertisement
நின்ற கோலத்தில் வீரநிலையில் மீசையுடன் வேங்கடகிருஷ்ணனாகவும், யோக நிலையில் யோகநரசிம்மராகவும், போகசயன நிலையில் ஸ்ரீரங்கநாதரும் என பக்தர்களுக்கு அருள்பாலிப்பது சிறப்பம்சமாகும்.
இந்த ஆண்டு வைகுண்ட ஏகாதசியை ஒட்டி, சொர்க்கவாசல் திறப்பு நிகழ்ச்சி வரும் டிச. 30 ஆம் தேதி அதிகாலை 5 மணிக்கு நடைபெற உள்ளது. வரும் டிச. 19 ஆம் தேதி முதல் டிச. 29 ஆம் தேதி வரை பகல்பத்து உற்சவம் நடைபெறுகிறது. தொடர்ந்து ஜன. 10-ஆம் தேதி வரை இராப்பத்து உற்சவமும் நடைபெறுகிறது.
இதேபோன்று சென்னை புரசைவாக்கம் சீனிவாசப் பெருமாள் கோயில், கொளத்தூர் லட்சுமி நாராயணப் பெருமாள் கோயில், முகப்பேர் ஸ்ரீ சந்தான ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில், மாதவரம் கரிவரதராஜ பெருமாள் கோயில், தியாகராயநகரில் உள்ள திருப்பதி தேவஸ்தான வெங்கடாஜலபதி கோயில் என பல்வேறு பெருமாள் கோயில்களில் வைகுண்ட ஏகாதசி, சிறப்பு வழிபாடுகள் நடைபெறவுள்ளன.
vaigunda egadhasi Sri Parthasarathy Swamy Temple in Triplicane will take place on December 30th (Tuesday).
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.