செய்திகள்

அன்னதானப்பட்டி மாரியம்மன் கோயிலில் தீர்த்தக்குட ஊர்வலம்!

கும்பாபிஷேக விழாவையொட்டி நடைபெற்ற தீர்த்தக்குட ஊர்வலம் விமர்சையாக நடைபெற்றது.

DIN

சேலம் அன்னதானப்பட்டி மாரியம்மன் கோயில் கும்பாபிஷேக விழாவையொட்டி நடைபெற்ற தீர்த்தக்குட ஊர்வலம் விமர்சையாக நடைபெற்றது.

சேலம் அன்னதானப்பட்டி விநாயகர் மாரியம்மன் மற்றும் திரௌபதி அம்மன் கோயில் குடமுழுக்கு விழா வரும் 6ம் தேதி நடைபெற உள்ளது. இதனையொட்டி நடைபெற்ற தீர்த்தக் குடம் மற்றும் முளைப்பாரி ஊர்வலத்தில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் பங்கேற்றனர்.

சேலம் கோட்டை பெரிய மாரியம்மன் கோயிலில் தொடங்கிய ஊர்வலம் செவ்வாய்பேட்டை வழியாக மேளதாளம் முழங்க சுமார் 3 கிலோமீட்டர் சென்று அன்னதானப்பட்டி மாரியம்மன் கோயிலை அடைந்தது. தொடர்ந்து தீர்த்த குடங்கள் அனைத்தும் யோக சாலை பூஜையில் வைக்கப்பட்டன.

தொடர்ந்து யாக சாலையில் வைக்கப்பட்ட தீருங்கள் அம்மனுக்கு அபிஷேகம் செய்யப்பட உள்ளது ஊர்வலத்தில் பங்கேற்ற அனைவருக்கும் கோவில் நிர்வாகத்தின் சார்பில் பிரசாதம் வழங்கப்பட்டது நிகழ்ச்சிக்கான ஏற்பாட்டினை கோயிலில் விழா குழுவினர் சிறப்பாக செய்திருந்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

என்டிபிசி நிறுவனத்தில் டிரெய்னி பணிக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

செங்கோட்டையன் பதவிப் பறிப்புக்கு எதிர்ப்பும் கொண்டாட்டமும்!

அமெரிக்காவுடனான உறவு சீர்குலையக் கூடாது: அகிலேஷ் யாதவ்

2-வது டி20: ஜிம்பாப்வே அபார பந்துவீச்சு; 80 ரன்களுக்கு ஆட்டமிழந்த இலங்கை!

தேனிலவுக் கொலை வழக்கு: 790 பக்க குற்றப்பத்திரிகை! | Honeymoon murder

SCROLL FOR NEXT