வார பலன்கள் 
செய்திகள்

அதிர்ஷ்ட வாய்ப்புகள் காத்திருக்கிறது இந்த ராசிக்கு: வார பலன்கள்!

இந்த வாரம் 12 ராசிக்கும் என்னென்ன பலன்கள் என்று தெரிந்துகொள்ளலாம்...

DIN

தினமணி ஜோதிடர் கே.சி.எஸ் ஐயர் இந்த வார (ஜூன் 20 - 26) பலன்களைத் துல்லியமாக நமக்குக் கணித்து வழங்கியுள்ளார். படித்துப் பயன் பெறுங்கள்.

மேஷம் (அசுவினி, பரணி, கார்த்திகை முதல் பாதம் முடிய)

தொழிலில் சீரான நிலைமை தொடும். உபரி வருவாயைப் பெற முயற்சிப்பீர்கள். உங்கள் செயல்களில் சுதந்திரப் போக்கைக் காண்பீர்கள். ரகசியங்களை அறிவீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு முன்னேற்றம் ஏற்படும். வியாபாரிகளுக்கு லாபம் ஏற்ற, இறக்கமாய் இருக்கும். விவசாயிகளுக்கு நீர்வரத்து அதிகரிக்கும்.

அரசியல்வாதிகள் பிரச்னைகளில் இருந்து விடுபடுவீர்கள். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்கள் சுப நிகழ்ச்சிகளை நடத்தி மகிழ்வீர்கள். மாணவர்கள் கல்வியில் படிப்படியான முன்னேற்றத்தைக் காண்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

ரிஷபம் (கார்த்திகை 2-ம் பாதம் முதல் ரோகிணி, மிருகசீரிஷம் 2-ம் பாதம் முடிய) 

பொருளாதாரம் சிறக்கும். ஆடம்பரப் பொருள்களை வாங்குவீர்கள். தொழிலில் வளர்ச்சி இருக்கும். அரசுப் பணிகளில் ஆதாயம் உண்டாகும்.

உத்தியோகஸ்தர்களுக்கு பதவிகள் தேடி வரும். வியாபாரிகள் கொடுக்கல் - வாங்கலில் லாபத்தைக் காண்பீர்கள். விவசாயிகள் குத்தகைப் பாக்கிகளை வசூலிப்பார்கள்.

அரசியல்வாதிகள் தொண்டர்களால் நன்மைகளைப் பெறுவீர்கள். கலைத் துறையினருக்கு புது ஒப்பந்தங்களினால் மகிழ்ச்சி ஏற்படும். பெண்களின் நட்பு வட்டாரம் விரிவடையும். மாணவர்கள் நண்பர்களிடம் கவனமாகப் பழகவும்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மிதுனம் (மிருகசீரிஷம் 3ம் பாதம் முதல் திருவாதிரை,புனர்பூசம் 3-ம் பாதம் முடிய)

மனக் குழப்பங்கள் மறையும். புதிய வாகனங்களை வாங்குவீர்கள். சேமிப்பு சிந்தனைகள் மேலோங்கும். சமுதாயத்தில் உயர்ந்தோரின் நம்பிக்கையைப் பெறுவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் சரியாகத் திட்டமிட்டு வேலைகளைச் செய்வீர்கள். வியாபாரிகள் சுறுசுறுப்பாகப் பணியாற்றுவீர்கள். விவசாயிகள் பிறருக்கு உதவுவீர்கள்.

அரசியல்வாதிகளின் மனக்கசப்புகள் நீங்கும். கலைத் துறையினருக்குப் பணவரவு உண்டாகும். பெண்கள் குடும்பத்தினரால் மதிக்கப்படுவீர்கள். மாணவர்கள் வெளிவிளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கடகம் (புனர்பூசம் 4-ம் பாதம் முதல் பூசம், ஆயில்யம் முடிய)

வெளிவட்டாரத்தில் புதிய அனுபவங்கள் ஏற்படும். ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். முயற்சிகளில் அலைச்சல் இருந்தாலும், புதிய ஆதாயம் கிடைக்கும். மனதில் தெளிவுகள் ஏற்படும்.

உத்தியோகஸ்தர்கள் புதிய வேலைகளுக்கு மாறுவீர்கள். வியாபாரிகளுக்கு வழக்குகள் சாதகமாக முடிவடையும். விவசாயிகள் கடன் வாங்க வேண்டாம்.

அரசியல்வாதிகள் பயணங்களில் கவனம் தேவை. கலைத் துறையினர் எச்சரிக்கையுடன் இருக்கவும். பெண்கள் குடும்பச் சூழலில் மாற்றம் உண்டு. மாணவர்கள் அனைவரிடமும் நற்பெயரை எடுப்பீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

சிம்மம் (மகம், பூரம்,  உத்திரம் முதல் பாதம் முடிய)

கடினமான வேலைகளையும் எளிதாகச் செய்வீர்கள். புதிய தேடல் அதிகரிக்கும். குடும்பத்தினர் ஆதரவாக நடப்பார்கள். தேவைகள் பூர்த்தியாகும்.

உத்தியோகஸ்தர்கள் வேலையில் கவனமாக இருப்பீர்கள். வியாபாரிகளுக்கு வங்கிக் கடன் கிடைக்கும். விவசாயிகள் பிறரிடம் பொறுப்புகளை அளிக்க வேண்டாம்.

அரசியல்வாதிகளுக்கு அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைக்கும். கலைத் துறையினர் புதிய ஒப்பந்தங்களைப் பெறுவீர்கள். பெண்கள் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள். மாணவர்கள் சக மாணவர்களுடன் இணக்கமாகப் பழகுவீர்கள்.

சந்திராஷ்டமம் - ஜூன் 20.

கன்னி (உத்திரம் 2-ம் பாதம் முதல் அஸ்தம், சித்திரை 2-ம் பாதம் முடிய)

பொருளாதார நெருக்கடி குறையும். உடனிருப்போர் பற்றிய புரிதல்கள் அதிகரிக்கும். தாமதமான காரியங்கள் வெற்றி அடையும். பிற விஷயங்களிலும் ஆர்வம் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்கள் பணவரவைக் காண்பீர்கள். வியாபாரிகள் புதிய முதலீடுகளைச் செய்வீர்கள். விவசாயிகள் குத்தகை பாக்கிகளைச் செலுத்துவீர்கள்.

அரசியல்வாதிகள் புதிய பொறுப்புகளைப் பெறுவீர்கள். கலைத் துறையினர் வெளிநாட்டு நிகழ்ச்சிகளை நடத்த ஒப்பந்தமாவீர்கள். பெண்கள் ஆன்மிகத்தில் ஈடுபடுவீர்கள். மாணவர்கள்

ஆக்கபூர்வமான நிகழ்ச்சிகளில் ஈடுபடுவீர்கள்.

சந்திராஷ்டமம் - ஜூன் 21, 22.

துலாம் (சித்திரை 3-ம் பாதம் முதல் சுவாதி, விசாகம் 3-ம் பாதம்

குடும்பத்தினர் புரிந்துகொள்வார்கள். புதியவர்களின் அறிமுகம் கிடைக்கும். உடன்பிறந்தோரின் ஆதரவு நிரம்பக் கிடைக்கும். தொழிலில் மேன்மை உண்டாகும்.

உத்தியோகஸ்தர்கள் ஊதிய உயர்வைப் பெறுவீர்கள். வியாபாரிகள் கடன் விஷயத்தில் கவனம் தேவை. விவசாயிகள் மாற்றுப் பயிர்களைப் பயிர் செய்வீர்கள்.

அரசியல்வாதிகள் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்வீர்கள். கலைத் துறையினர் பயிற்சிகளைக் கடமையாக்கிக் கொள்வீர்கள். பெண்களுக்கு ஆன்ம பலம் கூடும். மாணவர்கள் பெற்றோர் பேச்சைக் கேட்பீர்கள்.

சந்திராஷ்டமம் - ஜூன் 23, 24.

விருச்சிகம் (விசாகம் 4-ம் பாதம் முதல் அனுஷம், கேட்டை முடிய)

முகத்தில் பொலிவும் நடையில் மிடுக்கும் உண்டாகும். அதிர்ஷ்ட வாய்ப்புகள் தேடி வரும். உங்கள் முயற்சிகளுக்கு நண்பர்கள் உதவுவார்கள். தொழிலில் புதிய முதலீடுகள் வேண்டாம்.

உத்தியோகஸ்தர்கள் சக ஊழியர்களிடம் இணக்கமாக இருப்பார்கள். வியாபாரிகள் கொடுக்கல்} வாங்கலில் கவனம் தேவை. விவசாயிகளுக்கு விளைச்சல் பெருகும்.

அரசியல்வாதிகளுக்கு மேலிடத்தில் அங்கீகாரம் கூடும். கலைத் துறையினரின் செயல்களுக்கு வேகம் அதிகரிக்கும். பெண்கள் ரகசியங்களைப் பகிர வேண்டாம். மாணவர்கள் சக மாணவர்களை ஊக்குவிப்பார்கள்.

சந்திராஷ்டமம்} ஜூன் 25, 26.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம் முதல் பாதம் முடிய)

பூர்விக சொத்துகளில் சில மாற்றங்கள் உருவாகும். மதிப்பு அதிகரிக்கும். திறமைகளை வளர்த்துக்கொள்வீர்கள். தொழிலில் லாபம் அதிகரிக்கும்.

உத்தியோகஸ்தர்களுக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். வியாபாரிகள் கடையைச் சீர்படுத்துவீர்கள். விவசாயிகள் முக்கிய விஷயங்களை பரிமாறிக் கொள்ள வேண்டாம்.

அரசியல்வாதிகள் அநாவசிய சிந்தனைகளைக் குறைக்கவும். கலைத் துறையினர் புதிய விஷயங்களைக் கற்பீர்கள். பெண்கள் குழந்தைகளை ஆன்மிகத்தில் ஈடுபடுத்துவீர்கள். மாணவர்கள் தனித்திறன்களை வெளிப்படுத்துவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

மகரம் (உத்திராடம் 2-ம் பாதம் முதல் திருவோணம், அவிட்டம் 2-ம் பாதம் முடிய)

புதிய சூட்சுமங்களைக் கற்பீர்கள். உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவீர்கள். உடனிருப்போரை அனுசரித்து நடப்பீர்கள். புதிய வீடுகளை வாங்க முயற்சிப்பீர்கள்.

உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகப் பிரச்னைகள் குறையும். வியாபாரிகளுக்கு வங்கிக் கடன் கிடைக்கும். விவசாயிகளுக்கு விளைச்சல் பெருகும்.

அரசியல்வாதிகள் மேலிடத்தின் கருணைப் பார்வை விழும். கலைத் துறையினரின் வருவாய் உயரும். பெண்கள் சிந்தித்துச் செயல்படுவீர்கள். மாணவர்கள் தேவையான உடற்பயிற்சிகளை மேற்கொள்வீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

கும்பம் (அவிட்டம் 3-ம் பாதம் முதல் சதயம், பூரட்டாதி 3-ம் பாதம் முடிய)

தொழிலில் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். சொத்துகளில் வருமானம் வரும். ஆன்மிக சிந்தனைகள் மேலோங்கும். மகிழ்ச்சியான செய்திகள் வரும்.

உத்தியோகஸ்தர்கள் மேலதிகாரிகளின் குறிப்பறிந்து நடப்பீர்கள். வியாபாரிகள் கொடுக்கல், வாங்கலில் சிறப்பைக் காண்பீர்கள், விவசாயிகளுக்கு புழு, பூச்சிகளால் பாதிப்பு இருக்காது.

அரசியல்வாதிகள் கட்சிப் பணிகளில் தீவிரமாக இருப்பீர்கள். கலைத் துறையினருக்கு வருமானம் அதிகரிக்கும். பெண்கள் பெரியோரின் ஆசி பெறுவீர்கள். மாணவர்கள் வெளியூரில் சென்று படிக்கும் வாய்ப்புகள் உண்டு.

சந்திராஷ்டமம் - இல்லை.

மீனம் (பூரட்டாதி 4-ம் பாதம் முதல் உத்திரட்டாதி, ரேவதி முடிய)

பேச்சில் நன்மதிப்பைக் கூட்டுவீர்கள். தொழிலில் சிறு முதலீடுகளைச் செய்வீர்கள். இல்லத்துக்கு நவீன உபகரணங்களை வாங்குவீர்கள்.

உத்தியோகஸ்தர்கள் தன்னம்பிக்கையுடன் இருப்பீர்கள். வியாபாரிகளுக்கு கடன் பிரச்னைகள் குறையும். விவசாயிகள் சாதுர்யமான பேச்சால் பிறர் ஆதரவைப் பெறுவீர்கள்.

அரசியல்வாதிகள் புதிய அனுபவங்களைப் பெறுவீர்கள். கலைத் துறையினர் சாதனைகளைப் படைப்பீர்கள். பெண்கள் கணவருடன் அனுசரித்து நடப்பீர்கள். மாணவர்கள் வெளிவிளையாட்டுகளில் வெற்றி பெறுவீர்கள்.

சந்திராஷ்டமம் - இல்லை.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

வரதட்சிணைக் கொடுமை: மாமியார் - கணவர் சேர்ந்து பெண்ணை எரித்துக் கொன்ற கொடூரம்!

காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்யும்போது குழந்தைகளின் வயிறு நிறைகிறது: முதல்வர்

சொல்லப் போனால்... புள்ளிகளும் கோடுகளும்!

எல் சால்வடாரில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்

வீடு வாங்கும் யோகம் இந்த ராசிக்கு: தினப்பலன்கள்!

SCROLL FOR NEXT