வேதாரண்யம் கோயில் தேரோட்டம்  
செய்திகள்

வேதாரண்யேசுவரர் கோயிலில் தேரோட்டம்: திரளானோர் பங்கேற்பு!

திரளானோரின் பங்கேற்பில் வேதாரண்யம் கோயில் தேரோட்டம் விமரிசையாக நடைபெற்றது.

DIN

நாகை மாவட்டம், வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோயில் மாசிமகப் பெருவிழாவையொட்டி, இன்று காலையில் தொடங்கிய தேரோட்டத் திருவிழாவில் ஏராளமான மக்கள் வடம் பிடித்து இழுத்தனர்.

வேதாரண்யேசுவரர் கோயில் தேரோட்டத்தில் திரளானோர் பங்கேற்பு

வேதாரண்யேசுவரர் கோயிலில் நிகழாண்டு மாசிமகப் பெருவிழா கடந்த பிப்.20ஆம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. மாசிமகப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான ரத்ன சிம்மாசன ஹம்ச நடன புவனி விடங்க தியாகராஜசுவாமி எழுந்தருளும் தேரோட்டம் திங்கள்கிழமை காலையில் தொடங்கியது.

வேதாரண்யேசுவரர் கோயில் தேரோட்டம்

பாரம்பரிய முறைப்படி தப்பு, தாரை, கொம்பு முழங்க நாதஸ்வர இசையுடன் திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது. தேரோட்டத் திருவிழாவையொட்டி வேதாரண்யம் வட்டாரத்துக்குள்பட்ட பகுதியில் செயல்படும் பள்ளிகளுக்கு உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அவதாருடன் போட்டி! ரூ. 1,000 கோடி வசூலை நோக்கி துரந்தர்!

15 ஆண்டுகளில் மோசமான ஆஸி. அணி? விமர்சித்த இங்கிலாந்து வீரருக்கு பதிலடி கொடுத்த லபுஷேன்!

டாக்ஸிக் கியாரா அத்வானி!

விஜய் இப்போது நடிகர் அல்ல: அருண் ராஜ்

2026 பேரவைத் தேர்தல்: பாமக சிறப்பு பொதுக்குழுக் கூட்டம்!

SCROLL FOR NEXT