வேதாரண்யேசுவரர் கோயிலில் தேரோட்டம்!
வேதாரண்யேசுவரர் கோயிலில் மாசி மகப் பெருவிழாவையொட்டி தேரோட்டம்..
நாகை மாவட்டம், வேதாரண்யம் வேதாரண்யேசுவரர் கோயில் மாசி மகப் பெருவிழாவையொட்டி, இன்று காலையில் தொடங்கிய தேரோட்டத் திருவிழாவில் ஏராளமான மக்கள் வடம் பிடித்து இழுத்தனர்.
வேதாரண்யேசுவரர் கோயிலில் நிகழாண்டு மாசிமகப் பெருவிழாவின் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான ரத்ன சிம்மாசன ஹம்ச நடன புவனி விடங்க தியாகராஜசுவாமி எழுந்தருளும் தேரோட்டம் சனிக்கிழமை காலையில் தொடங்கியது.
பாரம்பரிய முறைப்படி தப்பு, தாரை, கொம்பு முழங்க நாதஸ்வர இசையுடன் திருத்தேர் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி தொடங்கியது.
Advertisement
Advertisement
இந்த நிகழ்ச்சியில் திரளான மக்கள் தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். பின்னால், அம்பாள் எழுந்தருளிய சப்பரத்தைப் பெண்களிடம் சிறுவர்களும் இழுத்துச் செல்கின்றனர்.
A large number of people took part in the chariot festival that began this morning on the occasion of the Masi Mahapa festival of the Vedaranyeswarar Temple.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.