திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் ஆண்டுதோறும் சித்ரா பௌர்ணமி நாளில் லட்சக்கணக்கில் பக்தர்கள் வருகை தந்து கிரிவலம் செல்வது வழக்கம்.
அண்ணாமலையார் கோயிலில் மே 11, 12 தேதிகளில் சித்ரா பெளர்ணமியை ஒட்டி, 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல லட்சக்கணக்கான பக்தர்கள் ஒரே நாளில் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்பதால், கிரிவலப்பாதையில் குடிநீர், கழிப்பறை வசதி, அன்னதானம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் ஏற்பாட்டை மாவட்ட ஆட்சியர், எஸ்.பி மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்து வருகிறார்கள்.
ஆண்டுதோறும் சுமார் 20 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என்பதால், இந்த ஆண்டு வரும் 11, 12 தேதிகளில் (ஞாயிறு, திங்கள்) சித்ரா பெளர்ணமி வரும் நிலையில், 20 லட்சத்திற்கும் மேற்பட்ட பக்தர்கள் வருகை தருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. ஞாயிற்றுக்கிழமை என்பதாலும், கோடை விடுமுறை என்பதால், கூட்டம் அதிகமாக இருக்கும் என்றே எதிர்பார்க்கப்படுவதாகக் கூறப்படுகிறது.
இதனிடையே கிரிவலப்பாதையில் குடிநீர், கழிப்பறை வசதி, அன்னதானம் உள்ளிட்ட அனைத்து அடிப்படை வசதிகள் குறித்து மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. மற்றும் உயர் அதிகாரிகள் ஆய்வு செய்து, தேவையான நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டுள்ளனர்.
சென்னை மற்றும் பல்வேறு மாவட்டங்களிலிருந்து சிறப்புப் பேருந்துகள் இயக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.