பிரசித்தி பெற்ற திருக்கருகாவூர் கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் கோயிலில் திருத்தேர் வெள்ளோட்டம் இன்று நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு தேரை வடம் பிடித்து இழுத்து சென்றனர்.
தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசம் தாலுக்கா, திருக்கருகாவூர் ஶ்ரீ முல்லைவனநாதர் உடனுறை ஶ்ரீ கர்ப்பரட்சாம்பிகை அம்பாள் ஆலயம் அமைந்துள்ளது. இந்த திருக்கோயிலுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் ஒரு கோடியே 43 லட்ச ரூபாய் செலவில் சுவாமி அம்பாளுக்கு இரண்டு புதிய தேர் செய்யும் பணி நடைபெற்று வந்தது. அதன் பணிகள் நிறைவடைந்து வெள்ளோட்டம் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
அம்மாபேட்டை முன்னாள் ஒன்றியக்குழு துணைத் தலைவர் தங்கமணி சுரேஷ்குமார், செயல் அலுவலர் விக்னேஷ், திருவடிக்குடில் சுவாமிகள் ஆகியோர் கலந்துகொண்டு திருத்தேரை வடம் பிடித்து இழுத்து வெள்ளோட்டத்தைத் தொடங்கி வைத்தனர்.
இந்நிகழ்ச்சியில் திருக்கோயில் ஆய்வாளர் லட்சுமி மற்றும் அறங்காவலர் குழுவினர் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள். கிராமவாசிகள், பக்தர்கள், திருக்கோயில் பணியாளர்கள் என ஏராளமானோர் கலந்துகொண்டு திருத்தேரை வடம்பிடித்து இழுத்து சென்றனர்.
ஏற்பாடுகளைத் திருக்கோயில் பணியாளர்கள் செய்து இருந்தனர். பாதுகாப்பு ஏற்பாடுகளை பாபநாசம் காவல் துணை கண்காணிப்பாளர் முருகவேலு தலைமையில் ஆய்வாளர் சகாயஅன்பரசு மற்றும் போலீசார் செய்து இருந்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.