தஞ்சை பெரிய கோயிலில் உள்ள பெரிய நந்தி 
செய்திகள்

சனி பிரதோஷம்: தஞ்சை பெரிய கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்பு!

பெரு நந்திக்கு நடைபெற்ற அபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

DIN

சனி பிரதோஷத்தை முன்னிட்டு உலக புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் பெரு நந்திக்கு நடைபெற்ற அபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்றனர்.

உலகப் புகழ்பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் மாதம் இருமுறை பிரதோஷ வழிபாடு வெகு விமர்சையாக கொண்டாடப்படுகின்றது.

அதன்படி வைகாசி மாதத்தின் முதல் பிரதோஷமான இன்று சனி பிரதோஷம் என்பதால், பெருவுடையாருக்கு ஏற்ற பெரு நந்திக்கு மஞ்சள், சந்தனம், பால், தயிர், திரவிய பொடி எலுமிச்சை சாறு, இளநீர் உள்ளிட்ட பன்னிரண்டு வகையான திரவியங்களால் சிறப்பாக அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் அலங்கரிக்கப்பட்ட நந்தியம்பெருமானுக்கு மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

அதிமுகவிற்காக வாக்குக் கேட்பேன்! விஜய் நாகரிகமாகப் பேச வேண்டும்! ஓபிஎஸ் பேட்டி

பிகார்: ராகுல் பேரணியில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பங்கேற்பு!

பிரணவ் மோகன்லாலின் ஹாரர் பட டீசர்!

திரிபுரா அணியில் இணையும் விஜய் சங்கர்! 13 ஆண்டுக்குப் பின் தமிழக அணியிலிருந்து விலகல்!

நடிகை லட்சுமி மேனன் தலைமறைவு! ஐடி ஊழியரை தாக்கிய விவகாரம்!

SCROLL FOR NEXT