மகா சிவராத்திரி: தஞ்சை பெரிய கோயிலில் குவிந்த பக்தர்கள்!
மகா சிவராத்திரியை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.
மகா சிவராத்திரியை முன்னிட்டு தஞ்சை பெரிய கோயிலில் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்து வருகின்றனர்.
உலகப்புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரிய கோயில் ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. மாமன்னன் ராஜராஜ சோழனால் கட்டப்பட்ட இந்த கோயில் தமிழர்களின் கட்டடக்கலைக்கும் சிற்பக்கலைக்கும் எடுத்துக்காட்டாய் விளங்கி வருகிறது.
இத்தகைய சிறப்பு வாய்ந்த இந்த ஆலயத்தில் வார விடுமுறை மற்றும் மகா சிவராத்திரியை முன்னிட்டு காலை முதல் பக்தர்கள் நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
Advertisement
Advertisement
மேலும் சிவராத்திரியை முன்னிட்டு இரவு 10 மணி, நள்ளிரவு 12 மணி, 2 மணி, அதிகாலை 4 மணி என நான்கு கால பூஜைகள் நடைபெறும். இதனையொட்டி பெருவுடையாருக்கு பால் அபிஷேகம் செய்யப்பட்டு, மலர்களால் அலங்காரம் செய்து தீபாராதனை காண்பிக்கப்பட்டது.
மகாசிவராத்திரியையொட்டி பெருவுடையார் தரிசனம் செய்ய பக்தர்கள் காலை முதலே நீண்ட வரிசையில் காத்திருந்து வழிப்பட்டு செல்கின்றனர்.
பக்தர்கள் அதிகளவில் திரண்டு உள்ளதால், கோயிலில் 3 அடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு அனைவரும் முழு சோதனைக்குப் பிறகே தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டனர்.
Devotees are standing in long queues at the Thanjavur Big Temple to have darshan on the eve of Maha Shivaratri.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.