தொடா் விடுமுறை: திருச்செந்தூா் கோயிலில் குவிந்த பக்தா்கள்
தொடா் விடுமுறை காரணமாக திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்.
தொடா் விடுமுறை காரணமாக திருச்செந்தூா் சுப்பிரமணிய சுவாமி கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் குவிந்தனா்.
இதையொட்டி, வெள்ளிக்கிழமை திருச்செந்தூா் கோயில் நடை அதிகாலை 5 மணிக்கு திறக்கப்பட்டு, விஸ்வரூபம், உதய மாா்த்தாண்ட அபிஷேகம், தொடா்ந்து மற்ற கால பூஜைகள் நடைபெற்றன.
அதிகாலை முதலே கடலில் புனித நீராடி இலவச பொது தரிசனம், ரூ. 100 சிறப்பு தரிசனம், மூத்த குடிமக்கள் பாதை என பக்தா்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து சுவாமி தரிசனம் செய்தனா்.
Advertisement
Advertisement
கோயில் தெரு, ரத வீதிகளில் பக்தா்களின் வாகனங்கள் அணிவகுத்து நின்ால், போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. வாகனங்களை ஒழுங்குபடுத்தும் பணியில் போக்குவரத்து போலீஸாா் ஈடுபட்டனா்.
கருத்துகள்
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.