கன்னிமார் கருப்பராய சுவாமி கோயிலில் முளைப்பாரி ஊர்வலம்!
கன்னிமார் கருப்பராய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
அருள்மிகு ஸ்ரீ கன்னிமார் கருப்பராய சுவாமி திருக்கோயில் கும்பாபிஷேக விழாவை முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் நடைபெற்றது.
சூலூர் அருகே முத்த கவுண்டன் புதூரில் அருள்மிகு ஸ்ரீ கன்னிமார் கருப்பராயசாமி திருக்கோவிலின் கும்பாபிஷேகம் புதன்கிழமை 20 ஆம் தேதி நடைபெறுகிறது அதையும் முன்னிட்டு முளைப்பாரி ஊர்வலம் மற்றும் சுவாமி சிலைகளை நிறுவுதல் மற்றும் முதல் கால வேள்வி பூஜை செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது.
சூலூர் அருகே முத்த கவுண்டன் புதூர் பகுதியில் அருள்மிகு ஸ்ரீ கன்னிமார் சுவாமி கருப்பராய ஸ்வாமி திருக்கோவில் கும்பாபிஷேக விழா புதன்கிழமை நடைபெறுவதை ஒட்டி செவ்வாய்க்கிழமை மாலை முத்து கவுண்டன்புதூர் அங்காளம்மன் கோயிலில் இருந்து பக்தர்கள் முளைப்பாரி எடுத்து ஊர்வலமாக வந்தனர் மேலும் கங்கணம் கட்டிய சாமிகள் கலசத்தை எடுத்து ஊர்வலமாக வந்தன. மேளதாளம் உலக ஆட்டம் பாட்டத்துடன் முளைப்பாரி ஊர்வலம் வெகு விமர்சையாக நடைபெற்றது.
Advertisement
Advertisement
எந்த ஊர்வலத்தில் நூற்றுக்கு மேற்பட்ட பெண்கள் விரதம் இருந்து கலந்துகொண்டு முளைப்பாரியை எடுத்து வந்தனர். முதல் கால வேள்வி பூஜை நடைபெறும் வேள்வி மண்டபத்தின் சுற்றி முளைப்பாரியை வைத்து வழிபாடு நடத்தினர்.
மேலும் கருப்பராய சுவாமி மற்றும் கன்னிமார் சுவாமிகள் சிலை பிரதிஷ்டை செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்றது. முதல் கால வேள்வி பூஜை சிறப்பாக நடைபெற்றது. புதன்கிழமை காலை வெறும் விமர்சையாக கும்பாபிஷேக விழா நடைபெற உள்ளது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு பக்தி பரவசத்துடன் ஊர்வலமாக வந்தனர்.