'தினமணி' நடத்திய நவராத்திரி கொலு போட்டி முடிவுகள்: பரிசு பெற்றவர்கள் விவரம்
தினமணி நடத்திய நவராத்திரி கொலு போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
தினமணி நடத்திய நவராத்திரி கொலு போட்டி முடிவுகள் அறிவிக்கப்பட்டு, வெற்றி பெற்றவர்களுக்குப் பரிசுகள் வழங்கப்பட்டன.
நவராத்திரி கொலு போட்டியில், தினமணி வாசகர்கள் தங்கள் வீடுகளில் அலங்கரித்து வைத்திருந்த நவராத்திரி கொலு புகைப்படங்கள் / விடியோக்களை அனுப்பியிருந்தனர். அவை தினமணி.காம் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தன.
இந்தப் போட்டியில் பங்கேற்றவர்களில், மிகச் சிறப்பாக அலங்கரித்து வைத்திருந்த நவராத்திரி கொலுவை தேர்வுக் குழுவினர் தேர்வு செய்து, அவர்களுக்கான பரிசுகளும் வழங்கப்பட்டன.
முதல் பரிசு - பவித்ரா நந்தகுமார்,
ஆரணி, திருவண்ணாமலை மாவட்டம்;
இரண்டாம் பரிசு - சாம்பசிவம்
குரோம்பேட்டை, சென்னை;
மூன்றாம் பரிசு - சத்திய நாராயணமூர்த்தி
ஷெனாய் நகர், சென்னை ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.