சினிமா எக்ஸ்பிரஸ்

'என்ன புரியவில்லையே?' என்றார்  எம்.ஜி.ஆர் - கே .பாலசந்தர் 

கவியோகி வேதம்

முதன் முதலாக 'மேஜர் சந்திரகாந்த்' நாடகம் பார்ப்பதற்கு வந்திருந்த பொழுது மக்கள் திலகம் எம்.ஜி,.ஆரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது.

அரங்கில் அவர் பேசும்பொழுது நாடகத்தில் வரும் உரையாடலையும் ஒவ்வொரு வார்த்தையையும் அலசி பேசியது எனக்கு பிடித்திருந்தது.

அவர் நடித்த படங்களை நன் பார்த்திருக்கிறேன். ஆனால் எதையும் கூர்ந்து நோக்கி சிந்தித்து பேசும் ஆற்றல் உள்ளவர் என்பதை அன்றுதான் அறிந்து கொண்டேன்.

இதன்பின்பு மதிப்புக்குரிய ஆர்.எம்.வி என்னை அழைத்து 'தெய்வத்தாய்' படத்திற்கு மக்கள் திலகம் எம்.ஜி,.ஆர் என்னை வசனம் எழுதச் சொன்னதாக தெரிவித்தார். அப்போது திரைப்படத்துறைக்கு நான் முற்றிலும் புதிது.

திரைப்படம் என்பது வேறு மீடியம்; நாடகம் என்பது வேறு. அதை எப்படி செய்வது என்று தெரியாமல் இருக்கும் பொழுது, அவ்வப்பொழுது எனக்கு எப்படிச் செய்யலாம் என்று சொல்லிக் கொடுப்பார்.

எவ்வாறு உரையாடல் இருந்தால் நன்றாக இருக்கும் என்று சொல்லிக் கொடுப்பார். சாதாரண மனிதர்களைப் பற்றிக் கூறி அப்படிப்பட்டவர்களுக்கும் புரிய வேண்டும் என்பதை அடிக்கடி வலியுறுத்துவார்.

நான் பெரியவர்களுக்கு மட்டும் புரியும் படி, வசனம் எழுதி அவரிடம் காண்பித்தால், 'என்ன புரியவில்லையே?' என்று கூறுவார். அதைப் பற்றி உண்மை எனக்கு பின்புதான் தெரிந்தது.மற்றவர்களுக்கு புரியாது என்று சொல்வதை விட, தனக்கே புரியவில்லை என்று சொன்னாலதான், எழுதுகின்ற எனக்கு அதில் அதிக கவனம் வரும் என்பது அவரது எண்ணம்.              

எந்தக் கதையை எடுத்துக் கொண்டாலும் சரி,அந்தக் கதையில் மக்களுக்குத் தேவையான உருப்படியான கருத்த்துக்களை சொல்லணும் என்பதில் பிடிவாதமாக இருப்பார்.

அவர் ஒரு நடிகர் என்கின்ற வகையில், தன்னுடைய  'இமேஜை' குறைக்கும் படியான எந்தக் கதாபாத்திரத்தையும் ஏற்று நடித்ததில்லை.

நாகை தருமன்

(சினிமா எக்ஸ்பிரஸ் 01.04.1983 இதழ்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சஞ்சு சாம்சன் விக்கெட் குறித்து சங்ககாரா கூறியது என்ன?

மெட் காலாவில் சஹீரா!

விழுப்புரம் வாக்கு எண்ணிக்கை மையத்தில் கண்காணிப்பு கேமராக்கள் செயலிழப்பு!

தமிழ்ப் புதல்வன் திட்டம் ஜூலையில் தொடங்கப்படும்: தலைமைச் செயலாளர்

மருமகன் ஆகாஷ் ஆனந்த் தனது அரசியல் வாரிசு கிடையாது: மாயாவதி அறிவிப்பு

SCROLL FOR NEXT