சினிமா எக்ஸ்பிரஸ்

என் முன்னேற்றத்தை தடுத்தவங்க எத்தனை பேர் தெரியுமா? - சிவகுமார் 

DIN

காலை ஏழு மணிக்கு சிவகுமாரை வீட்டில் பார்த்த பொழுது செலஃப்  மேக்கப்புக்கு தயாராகயிருந்தார். அவரிடம் கேள்விகளைத் தொடங்கினேன்.

"இண்டஸ்ட் ரி  எப்படி இருக்கு சிவகுமார்?"

"பொதுவா திருப்தியாவே இல்லை சார், கதையம்சம் கொஞ்சம் கூட இல்லாத படங்கள் வர்றது ஆரோக்கியமில்லாத ஒரு சூழ்நிலையா எனக்கு தோணுது.எனக்குன்னு என் மனசுக்குள்ளே சில கன்விக்ஷன்ஸ்   இருக்கு.  சில கொள்கைகளை தெளிவா பாலோ பண்றேன். ஒரு படத்துக்கு நான் சைன் பண்ணா, அந்த படத்தோட கதை என்னை ஈர்க்கணும். வலுவான கதையம்சத்தை நான் ரொம்ப எதிர்பார்க்கிறேன்.  எல்லாத்துக்கும் மேலா  வேரோட்டமான  கதை ஒரு முக்கியமான விஷயமா எனக்கு படுது.

நூறு படங்களைத் தாண்டி நடிச்சுகிட்டு இருக்கீங்க.பட் ஸ்டில் உங்க நடிப்பு ஒரு பள்ளிக்கூட பையனோட நடிப்பு மாதிரி படுது எனக்கு. வலுவான கதைனு நீங்க சொல்றது, உங்க நடிப்புல இருக்கற பலவீனத்தை மறைக்காதான்னு தோணுது எனக்கு.

யூ ஆர் டோட்டலி ராங். நல்ல கதையம்சம் முக்கியம்னு நான் சொல்றது நிச்சயமா உண்மையா என் பலவீனத்தை மறைக்க இல்லை. அப்படி ஒரு பலவீனம் எனக்கு கிடையாது. என்னோட எல்லா படத்தையும் விட்டுடுங்க. வண்டிச்சக்கரத்துலேயும், ரோசாப்பூ ரவிக்கைக்காரியிலயும்  என் நடிப்பு உங்களுக்கு பள்ளிக்கூட பையன் மாதிரி பட்டுதுன்னா. அதுக்கு மேல  நான் பேசுறதுலயே அர்த்தமில்லன்னு நினைக்கிறன்.

என்னோட ஆரம்ப காலம் தெரியுமா உங்களுக்கு ? அது ஒரு ஸ்ட்ரகில். கமலஹாசன்ன் மாதிரி ஆர்டிஸ்ட்டோட என்னைய சட்டுனு கம்பேர் பண்ணிடக்கூடாது.நன் பேசிக்கலா நடிகனாகனும்னு அலைஞ்சவனில்லை. ஏதோ ஒரு நேரம் என்னை இந்த லைன்ல தள்ளிடிச்சு. சரி..வந்தத ஏத்துக்கிட்டு கடுமையா உழைச்சேன்...உண்மையா பாடுபட்டேன்.  என் முன்னேற்றத்தை தடுத்தவங்க..என்னை அழுத்தப் பாத்தவங்க எத்தனை பேர் தெரியுமா? இந்தப் பையன எங்க வளந்துடுவானோனு, எடிட்டிங் ரூம்ல உக்காந்து நான் நடிச்ச காட்சிகளை   கட் பண்ணின பெரிய மனிதர்களை பத்தி சொல்லட்டுமா? ஒவ்வொண்ணும் ஒரு கதை. 

கத்திப்  பேசுறது கொஞ்சம் ஓவர் ஆக்ட் பண்றதுதான் நடிப்புன்னு ஒரு காலமா இருந்தது. இப்ப ட்ரெண்ட் மாறியிருக்கு. கமலஹாசன் மாதிரி ஆட்கள் கொஞ்சம் பழைய பாதையில் இருந்து விலகி, சட்டிலா பண்றாங்க.

சிவாஜியியோட கூட நடிக்கும் போது  நான் சட்டிலா பண்ணேன்னா நான் தெரியவே மாட்டேன் இல்லையா? சட்டிலா பண்ண எனக்கு தெரியாதா? இல்ல முடியாதா?   

அப்ப  இருந்த சூழ்நிலைகளுக்கும், என்வயரான்மெண்ட்டுக்கும் தககுந்த மாதிரி எப்படி பண்ணியிருக்கணுமோ அபப்டித்தான் செய்திருக்கேன். அந்த பீரியட்ல நான் மிதமா பண்ணியிருந்தேன்னா, சிவகுமாருக்கு நடிக்கத்  தெரியலன்னு ஒரு வழி  பண்ணியிருப்பாங்க.

சந்திப்பு: உத்தமன்

படங்கள்: சங்கர் கணேஷ்

(சினிமா எக்ஸ்பிரஸ் 01.01.82 இதழ்)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தேவகெளடா பேரன் மீது நடவடிக்கை தேவை: அமித் ஷா

ஜீப் மீது லாரி மோதி விபத்து: 6 பேர் பலி

கரோனா தடுப்பூசியால் ’ரத்தம் உறைதல்’ பாதிப்பு ஏற்படலாம் -ஆய்வில் தகவல்

வெப்ப அலை: தமிழகத்துக்கு மே 4 வரை மஞ்சள் எச்சரிக்கை!

வேதாரண்யம் உப்பு சத்தியாகிரக நினைவு நாள்: தியாகிகளுக்கு அஞ்சலி!

SCROLL FOR NEXT