சினிமா எக்ஸ்பிரஸ்

ஐப்ரோ எழுதுவது எப்படி என்று பாலசந்தர்கிட்ட போய் கேட்டேன்

கவியோகி வேதம்

கே.பாலசந்தர் 

டைரக்டர் பாலசந்தர் படத்தில் நடித்ததெல்லாம் சுவையான அனுபவங்கள்.'நூற்றுக்கு நூறு' தான் என் முதல் படம் அவருடன்.

அதில் எனக்கு வித்தியாசமான ரோல். பொதுவாவே எனக்கு படத்தில் டூயட் பாடுவது பிடிக்காது. அவையெல்லாம் எனக்கு தேவையில்லை என்றே சொல்வேன். சொல்கிறேன்.

அந்தப் படத்திலெனக்கு எனக்கு கதாநாயகி வேடம் இல்லை. ஒருமாதிரியான வில்லி வேடம்தான். பாலசந்தர் படத்தில் நடிக்க ஆரம்பித்ததும்தான் பலவிஷயங்களைக் கற்றுக் கொள்ள முடிந்தது.

அதற்கு முன்பு வரை படங்களில் டையலாக் என்றால் அது டையலாக் போலவே இருக்கும். இன்னதுதான்..இப்படித்தான் பேசணும் என்று ஒரு கட்டுப்பாடு வைத்துக் கொண்டுதான் எழுதுவார்கள்.

அந்த ட்ரெண்டை மாற்றினார் பாலசந்தர். இயல்பாய், யதார்த்தமாய், சர்வ சாதாரணமாய் முதன் முதலில் அறிமுக ப்படுத்தியது அவர்தான்.          

அது போல நடிப்பிலயும் 'கேமராவைப் பார்க்காம நடி; கேமராங்கறது நம் சவுகரியத்துக்குத்தான். அதைக்கண்டு பயப்படவே கூடாது. கேமரான்னு ஒன்னு இருக்கறதா நினைக்காம நடி.என்பார்.

புது ஆர்ட்டிஸ்ட்,பழைய ஆர்ட்டிஸ்ட், பெரிய, சிறிய ஆர்ட்டிஸ்ட் என்கிற பேதமே அவர் பார்த்ததில்லை.

யாராக இருந்தாலும் சரியா வந்தா சரி.   இல்லேன்னா சரியா வர வைப்பார். எல்லோரையுமே ஒரே மாதிரிதான் ட்ரீட் பண்ணுவார். ஆர்டிஸ்ட்டுக்கு பந்தாவெல்லாம் கூடாது அப்டிங்குறத வலியுறுத்தி வற்புறத்துனதுல அவருக்கு முதலிடம் உண்டு. எந்த விஷயத்திலும் தன் தனித்தன்மையை பதிப்பார். பாலசந்தரோட பல படங்களில் நடிச்சிருந்தாலும் நான் அவரோட பேசினது கொஞ்சம்தான்.

சினிமாவில் ஒவ்வொரு நாள் நடிக்கிறதுக்கு ஒரு அனுபவம். தினமும் புதிது புதிதாய் ஏதாவது கத்துக் கொண்டிருக்கேன்.      

பாலசந்தரின் 'சொல்லத்தான் நினைக்கிறேன்' படத்தில்நடித்தது ஒரு வித்தியாசமான அனுபவம். அதுவரை எனக்கு மேக்கப்பில் எந்த நுணுக்கம், அவசியம் எதுவும் தெரியாது. கண் ஐப்ரோ எப்படி எழுதுவது என்று கூட  தெரியாது என்றால் பார்த்துக் கொள்ளுங்கள்.எப்படி என்று பாலசந்தர்கிட்ட போய் கேட்டேன். 

இதையெல்லாமா போய் அவரிடம் கேட்பார்கள் ..என்று மற்றவர்கள் கிண்டல் செய்தார்கள்.     ஆனால் பாலசந்தர் அதையெல்லாம் பொருட்படுத்தவே இல்லை. ஒரு குடும்பத்துப்பெண், எப்போதும் பிசி, குடும்ப வேலை, பலவிதமான பொறுப்புகளுக்கு இடையே அவளுக்கு அலங்கரிக்க  முடியாத நிலை. இந்த ரோலுக்கு எப்படி மேக்கப் இருக்க வேண்டும் என்று அவர்தான் சொல்லித்தந்தார்.     

(சினிமா எக்ஸ்பிரஸ் 15.03.84 இதழ்) 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நெல்லை புதிய பேருந்து நிலையத்தில் பயணிகள் - நடத்துநா் வாக்குவாதம்

கேஜரிவாலை கொலை செய்ய பாஜக சதி செய்கிறது: அமைச்சா் அதிஷி கடும் குற்றச்சாட்டு

மாற்று இடத்தில் நியாயவிலைக் கடை: சித்தவநாயக்கன்பட்டி மக்கள் மனு

சரக்கு வாகனம் கவிழ்ந்ததில் 21 போ் காயம்

சேரன்மகாதேவி கல்லூரியில் பயிலரங்கு

SCROLL FOR NEXT