ஆராய்ச்சிமணி

கூடுதல் பேருந்துகள் தேவை!

DIN

அயப்பாக்கம் நகராட்சி 11-ஆவது வார்டு வி.ஜி.என். பிளாட்டினா குடியிருப்பில் 900 வீடுகள் உள்ளன.  இந்தப் பகுதிக்குப் போதிய பேருந்து வசதி இல்லை. வழித்தட எண். 63  மட்டுமே இங்கு வருகிறது.  இக்குடியிருப்பு திருவேற்காடு பிரதான சாலையில் உள்ளது. அயப்பாக்கம் வரை போதுமான பேருந்து வசதி உள்ளது. வி.ஜி.என் பிளாட்டினா குடியிருப்பு செல்ல அயப்பாக்கம் சென்று அங்கிருந்து ரூ.50 செலவு செய்து ஆட்டோ பிடித்து செல்ல வேண்டியுள்ளது. இதனால் குடியிருப்புப் பகுதியில் வசிப்போர் மிகுந்த சிரமத்துக்குள்ளாகின்றனர். அம்பத்தூர் தொழிற்பேட்டையிலிருந்து அயப்பாக்கம் செல்லும் பேருந்துகளை திருவேற்காடு வரை நீடிக்கவும், திருவேற்காட்டிலிருந்து பாரிமுனை, கோயம்பேடு, அயனாவரம், வள்ளலார்நகர், கிண்டி செல்லும் வழித்தடங்களில் பேருந்துகளை இயக்கினால் இப்பகுதி மக்கள் மிகுந்த பயனடைவார்கள்.
நித்திலா செல்வராஜ், வில்லிவாக்கம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

அம்பையில் அமமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

கொல்லங்கோடு நகராட்சி அலுவலகம் முன் தொழிலாளி தா்னா

பள்ளி மாணவ-மாணவியருக்கு கல்வி வழிகாட்டுதல் நிகழ்ச்சி

கைப்பந்துப் போட்டி: தங்கம் வென்ற ஒசூா் மகளிா் அணி

அந்தரபுரம் ஸ்ரீ சாஸ்தா கோயிலில் குடமுழுக்கு

SCROLL FOR NEXT