ஆராய்ச்சிமணி

நடைபாதை சீர்படுத்தப்படுமா?

DIN

வண்ணாரப்பேட்டையிலிருந்து லிம்கோ நகர் வரை மெட்ரோ ரயில் திட்டத்துக்காக, சாலையின் நடுவில் தூண்கள் அமைக்கும் பணிகள் நடைபெறுகின்றன. இருபுறமும் அமைந்துள்ள கடைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், திருமண மண்டபங்கள் போன்றவற்றிற்கு வருபவர்கள் தங்களின் இருசக்கர வாகனங்களை நடைபாதையில் நிறுத்தி விடுகின்றனர். இதனால், கடைகளுக்கு வந்து செல்பவர்கள் நடைபாதையில் நடக்க முடியாமல், சாலையிலேயே போக்குவரத்து நெரிசலுக்கு மத்தியில் நடக்க வேண்டியுள்ளது. இதன் விளைவாக அதிக விபத்துகள் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. மக்கள் அச்சத்தோடு சாலையில் இறங்கி நடக்க வேண்டிய நிலை தொடர்கிறது. சம்பந்தப்பட்ட துறையினர் இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.
கவியழகன், திருவொற்றியூர்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு தர்பாரண்யேஸ்வரர் கோயில் பிரம்மோற்சவம்: கொடியேற்றத்துடன் தொடங்கியது!

சென்னையில் எங்கு அதிகபட்ச வெப்பநிலை? - தமிழ்நாடு வெதர்மேன் பதிவு!

ஸ்ரீரங்கம் அரங்கநாத சுவாமி கோயிலில் நாளை சித்திரைத் தேரோட்டம்!

ஓடிடியில் மஞ்ஞுமல் பாய்ஸ்!

பயங்கரவாதிகளின் தாக்குதல் மிகவும் வெட்கத்திற்குரியது: ராகுல் காந்தி

SCROLL FOR NEXT