தினந்தோறும் திருப்புகழ்

பகுதி- 718

ஹரி கிருஷ்ணன்

‘என்னை அடிமைகொண்டு ஆண்டருளவேண்டும்’ என்று கோருகின்ற இந்தப் பாடல் திருச்செந்தூருக்கானது.

அடிக்கு ஒற்றொழித்து 37 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, நான்கு, ஏழு ஆகிய சீர்கள் நான்கு குற்றெழுத்துகளையும் ஒரு (கணக்கில் சேராத) மெல்லொற்றையும்; இரண்டு, ஐந்து, எட்டு ஆகிய சீர்கள் ஒரு நெடிலோடு தொடங்கும் நான்கெழுத்துகளையும்; மூன்று, ஆறு, ஒன்பது ஆகிய சீர்கள் ஒரு நெடிலைக் கொண்ட மூன்றெழுத்துகளையும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றையும் கொண்டவை.


தந்ததன தானதன தத்தான
      தந்ததன தானதன தத்தான
      தந்ததன தானதன தத்தான                தனதான

சந்தனச வாதுநிறை கற்பூர
         குங்குமப டீரவிரை கத்தூரி
         தண்புழுக ளாவுகள பச்சீத              வெகுவாச

சண்பகக லாரவகு ளத்தாம
         வம்புதுகி லாரவயி ரக்கோவை
         தங்கியக டோரதர வித்தார             பரிதான

மந்தரம தானதன மிக்காசை
         கொண்டுபொருள் தேடுமதி நிட்டூர
         வஞ்சகவி சாரஇத யப்பூவை            யனையார்கள்

வந்தியிடு மாயவிர கப்பார்வை
         அம்பிலுளம் வாடுமறி வற்றேனை
         வந்தடிமை யாளஇனி யெப்போது        நினைவாயே

இந்த்ரபுரி காவல்முதன் மைக்கார
         சம்ப்ரமம யூரதுர கக்கார
         என்றுமக லாதஇள மைக்கார           குறமாதின்

இன்பஅநு போகசர சக்கார
         வந்தஅசு ரேசர்கல கக்கார
         எங்களுமை சேயெனரு மைக்கார       மிகுபாவின்

செந்தமிழ்சொல் நாலுகவி தைக்கார
         குன்றெறியும் வேலின்வலி மைக்கார
         செஞ்சொலடி யார்களெளி மைக்கார     எழில்மேவும்

திங்கள்முடி நாதர்சம யக்கார
         மந்த்ரவுப தேசமகி மைக்கார
         செந்தினகர் வாழுமரு மைத்தேவர்      பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தமிழ்நாடு முழுவதும் நாளை கடைகள் இயங்காது

சிதம்பரம்: வடலூர் பெருவெளி ஆர்ப்பாட்டத்திற்கு சென்றவர்கள் கைது!

கோடைக்காலம் வந்துவிட்டது...!

உதகைக்கு 5 நிமிடத்திற்கு ஒரு பேருந்து: போக்குவரத்து கழகம் அறிவிப்பு!

பூமியை நெருங்கும் எரிகற்கள்: எச்சரிக்கும் நாசா! என்ன நடக்கும்?

SCROLL FOR NEXT