தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 798

ஹரி கிருஷ்ணன்

‘என் வறுமை நீங்குமாறு மயில்மீதிலேறி வரவேண்டும்’ என்று கோரும் இப்பாடல், பொதுப்பாடல்கள் வரிசையைச் சேர்ந்தது.

அடிக்கு ஒற்றொழித்து 27 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  முதற்சீரில் மூன்று குற்றெழுத்துகளும் இரண்டு (கணக்கில் சேராத) வல்லொற்றுகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும் ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்றும்; மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் நான்கு குற்றெழுத்துகளும் இரண்டு (கணக்கில் சேராத) வல்லொற்றுகளும் பயில்கின்றன.

தத்தனத் தத்ததன தத்தனத் தத்ததன

      தத்தனத் தத்ததன                   தனதான

தத்துவத் துச்செயலொ டொட்டில்பட் டக்குருகு 

         சத்துவிட் டப்படிபொ              லடியேனுஞ் 

      சச்சிலுற் றுப்படியில் விட்டுவிட் டுக்குளறி 

         சத்துவத் தைப்பிரய              விடும்வேளை 

சுத்தமுத் தப்பதவி பெற்றநற் பத்தரொடு 

         தொக்குசற் றுக்கடையன்         மிடிதீரத் 

      துப்புமுத் துச்சரண பச்சைவெற் றிப்புரவி 

         சுற்றவிட் டுக்கடுகி               வரவேணும் 

வித்தகத் திப்பவள தொப்பையப் பற்கிளைய 

         வெற்றிசத் திக்கரக               முருகோனே 

      வெற்புமெட் டுத்திசையும் வட்டமிட் டுச்சுழல 

         விட்டபச் சைச்சரண              மயில்வீரா    

கத்தர் நெட்டுச் சடையர் முக்கணக் கக்கடவுள் 

         கச்சியப் பர்க்கருள்செய்           குருநாதா

      கற்பதத் தைக்குருகி யுற்பதத் துக்குறவர் 

         கற்பினுக் குற்றுபுணர்             பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பாஜகவில் இணைந்தார் தில்லி காங்கிரஸ் முன்னாள் தலைவர் அரவிந்த் சிங் லவ்லி

உலகை அள்ளுங்கள், சிவப்பைத் தீட்டுங்கள்! ஜோதிகா...

நெல்லை காங். நிர்வாகி ஜெயக்குமார் உடல் பிரேத பரிசோதனை

தில்லியில் கேட்பாரற்றுக் கிடந்த பையால் பரபரப்பு

பாஜகவின் பொய்யான வாக்குறுதிகளால் சலிப்படைந்த மக்கள்: கெலாட்

SCROLL FOR NEXT