தினந்தோறும் திருப்புகழ்

பகுதி - 788

ஹரி கிருஷ்ணன்


‘அடியேனின் பிறவிநோய் அழியவேண்டும்’ என்று கோரும் இப்பாடல் திருவண்ணாமலைக்கானது.

 அடிக்கு ஒற்றொழித்து 25 எழுத்துகளைக் கொண்ட பாடல்.  ஒன்று, மூன்று, ஐந்து ஆகிய சீர்களில் மூன்று குற்றெழுத்துகளும் ஒரு நெட்டெழுத்தும் என நான்கெழுத்துகளும்; இரண்டு, நான்கு, ஆறு ஆகிய சீர்களில் ஒரு நெடில், இரண்டு குறில், ஒரு (கணக்கில் சேராத) வல்லொற்று என மூன்றெழுத்துகளும் அமைந்துள்ளன.


தனதனா தானனத் தனதனா தானனத்

      தனதனா தானனத்                  தனதான


அழுதுமா வாவெனத் தொழுதுமூ டூடுநெக்

         கவசமா யாதரக்                  கடலூடுற்

      றமைவில்கோ லாகலச் சமயமா பாதகர்க்

         கறியொணா மோனமுத்          திரைநாடிப்

பிழைபடா ஞானமெய்ப் பொருள்பெறா தேவினைப்

         பெரியஆ தேசபுற்                 புதமாய

      பிறவிவா ராகரச் சுழியிலே போய்விழப்

         பெறுவதோ நானினிப்             புகல்வாயே

பழையபா கீரதிப் படுகைமேல் வாழ்வெனப்

         படியுமா றாயினத்                தனசாரம்

      பருகுமா றானனச் சிறுவசோ ணாசலப்

         பரமமா யூரவித்                  தகவேளே

பொழுதுசூழ் போதுவெற் பிடிபடா பார்முதற்

         பொடிபடா வோடமுத்            தெறிமீனப்

      புணரிகோ கோவெனச் சுருதிகோ கோவெனப்

         பொருதவே லாயுதப்              பெருமாளே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT