கிரேஸ் கெல்லி ஆஸ்கார் விருது வென்ற ஹாலிவுட் நடிகைளில் ஒருவர். இவர் 12.11.1929 அன்று பிலடெல்பியாவில்பிறந்தவர். இவரது தந்தை ஒரு புகழ் பெற்ற விளையாட்டு வீரர்; இவரது தாயார் பள்ளி ஆசிரியை.
பள்ளியில் பயிலும்போது ஆடைஅலங்கார அணிவகுப்புகளில் பங்கேற்றும் நாடகங்களிலும் நடித்து வந்தவர். கல்லூரி படிப்புக்கு பின்னர் அமெரிக்க நாடக அகடெமியில் இணைந்து படித்தவர். பின்பு அப்படியே ஹாலிவுட் படங்களிலும் வாய்ப்பு பெற்று நடிக்கத் துவங்கினார்.
1950-களில் ஹாலிவுட்டின் புகழ் பெற்ற நடிகையாக விளங்கினார். 11 திரைப்படங்களில் நடித்த பின்னர் மொனாக்கோ இளவரசர் ரைனரை திருமணம் செய்து கொண்டு நடிப்பை விட்டு விலகினார். அரச குடும்பத்தில் இணைந்த பின்னர் தனியாக அறக்கட்டளையொன்றை உருவாக்கி கலைத்துறையினர் மற்றும் வறுமை நிலையில் உள்ள குழந்தைகளின் நலனுக்கு உழைத்தார்.
இறுதியாக 14.09.1982 அன்று தன்னுடைய 52-ஆவது வயதில் கார் விபத்தில் மரணமடைந்தார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.