இந்த நாளில்...

அக்டோபர் 1 - ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 ஆம்  தேதி உலக முதியோர் தினமாக கொண்டாடப்படுகிறது.

DIN

அக்டோபர் 1 - ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1 ஆம்  தேதி உலக முதியோர் தினமாக கொண்டாடப்படுகிறது.

கடந்த சில ஆண்டுகளாகவே உலக அளவில் குழந்தைகளின் பிறப்பு மற்றும் இறப்பு விகிதம் குறைந்து வருகிறது. இதனால் வயதானவர்களின் எண்ணிக்கை குறிப்பிடத்தக்க அளவுக்கு உயர்ந்துள்ளது.

இதனைக் கருத்தில் கொண்டுதான் ஆண்டுதோறும் அக்டோபர் முதல் தேதியை உலக முதியோர் தினமாக ஐ.நா. பொதுச் சபை அறிவித்தது. இந்தநடைமுறை கடந்த 1990ஆம் ஆண்டில் இருந்து பின்பற்றப்பட்டுவருகிறது.

அதன் அடிப்படையில் கடந்த 2002ஆம் ஆண்டிலிருந்து, சர்வதேச அளவில் முதியோருக்கான செயல்பாட்டுத் திட்டமும் நடைமுறைப்படுத்தப்படுகிறது. எதிர்வரும் ஆண்டுகளில் வயது முதிர்ந்தோர் எதிர்கொள்ளக்கூடிய சவால் மற்றும் வாய்ப்புகளைக் கருத்தில் கொண்டு இத்திட்டம் கொண்டு வரப்பட்டது.

முதியோர் சுதந்திரம், பங்களிப்பு, வயதானவர்களை மதித்தல் போன்றவை உலக முதியோர் தினத்தின் முக்கிய நோக்கங்களாகும். மனிதர்களுக்கு வயதாக ஆக அவர்களின் தேவை முழுமையடைதல், சுகாதாரம் மற்றும் பாதுகாப்பு மட்டுமின்றி சமூக, கலாச்சார, அரசியல்ரீதியிலும் அவர்கள் பங்களிப்புஇருப்பதை நாம் உறுதி செய்தல் வேண்டும்.

முதியோர்களை பாதுகாப்பதுடன் அவர்களின் ஆரோக்கியம் மற்றும் பங்களிப்பிற்கும் நம்மால் இயன்றதை செய்ய உறுதி எடுத்துக் கொள்வோம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தோல்வி பயத்தில் நடுங்குகின்றனர் - முதல்வர் மு.க.ஸ்டாலின்

கடல் புறா!

எலி பேஸ்ட் சாப்பிட்ட ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 குழந்தைகள் மருத்துவமனையில் அனுமதி!

மே 25 - ஆறாம் கட்ட வாக்குப் பதிவு நடைபெற்ற 58 தொகுதிகள் யார் பக்கம்?

கேன்ஸ் திரைப்பட விழா: உயரிய விருதைப் பெற்றார் சந்தோஷ் சிவன்!

SCROLL FOR NEXT