இந்த நாளில்...

29.01.1595: ஷேக்ஸ்பியரின் புகழ்பெற்ற ‘ரோமியோ ஜூலியட்’ நாடகம் முதன்முதலாக அரங்கேறிய தினம் இன்று!

DIN

ஆங்கிலக் கவிஞரும், நாடக ஆசிரியருமான வில்லியம் ஷேக்ஸ்பியர் ஆங்கில மொழியின் மிகப்பெரும் எழுத்தாளர் ஆவார். இவர் உலகின் மிகப் புகழ் வாய்ந்த நாடக ஆசிரியர் என்றும் குறிப்பிடப்படுபவர் ஆவார்.

உலகில் பலரது உள்ளத்தை கொள்ளை கொண்டவை  இவரது படைப்புகள்  ஆகும். இவர் மொத்தம் 38 நாடகங்கள், 154 செய்யுள் வரிசைகள், 2 நெடும் விவரிப்பு கவிதைகள் மற்றும் பல பிற கவிதைகளையும் படைத்துள்ளார்.

இவருடைய நாடகங்கள் உலகின் பெரும்பாலான பெரிய மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டிருக்கிறது.

இவர் இயற்றிய ரோமியோ ஜூலியட் என்ற துன்பியல் நாடகம் 1595-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் இதே தேதியில்தான் முதன்முதலாக அரங்கேற்றப்பட்டது. இந்த நாடகமானது பாலியல் எண்ணம் செறிந்த, பருவகால வயது, காதல் மற்றும் மரணம் இவற்றினாலான புகழ்பெற்ற காதல் வீரத் துன்பியல் நாடகம் ஆகும்.

இந்த நாடகத்தில் அப்பொழுது பெரும் புகழ் பெற்றிருந்த பிரபல நகைச்சுவை நடிகரான கெம்பே பீட்டர் வேலைக்காரன் வேடம் ஏற்று நடித்திருந்தார்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆஸ்திரியாவில் பிரியா பவானி சங்கர்!

துணைக் கேப்டன் பதவிக்கு ஹார்திக் பாண்டியா தகுதியானவரா? முன்னாள் வீரர் பதில்!

மாதனூரில் சூறாவளி காற்றுடன் ஆலங்கட்டி மழை

ஸ்ரீதேவியின் புதல்வி!

தைவானில் 4.0 ரிக்டர் அளவில் நிலநடுக்கம்!

SCROLL FOR NEXT