இந்த நாளில்...

மே 22: சர்வதேச பல்லுயிர் தினம் இன்று!

DIN

பூமியில் ஒவ்வொரு உயிரினத்திற்கும் ஒரு வாழ்க்கை முறை, வாழ்விடம் உள்ளது. ஒவ்வொன்றும் மற்றொன்றை சார்ந்துள்ளது. பல்லுயிரிகள் இருந்தால் தான், பூமியில் சமநிலை ஏற்படும். நமக்கு தேவையான உணவு, மருத்துவம் மற்றும் இதர தேவைகளுக்கு நாம் பல்லுயிர்களை சார்ந்து இருக்கிறோம்.

பல்லுயிரிகளுக்கான வாழ்விடங்களை பாதுகாக்க வலியுறுத்தி, மே 22ம் தேதி, சர்வதேச பல்லுயிர் தினம் கடைபிடிக்கப்படுகிறது. பூமியில் உள்ள நீர் மற்றும் நிலத்தில் வாழும் எண்ணற்ற உயிரின வகைகளின் (பறவை, விலங்குகள், மரங்கள், தாவரங்கள்) தொகுப்பு, "பல்லுயிர் பரவல்' எனப்படுகிறது.

17ம் நூற்றாண்டில் ஏற்பட்ட தொழிற்புரட்சிக்கு பிறகு, பூமி பெரிய அழிவுகளை சந்தித்து வருகிறது. பல லட்சம் எக்டேர் பரப்பளவில் காடுகளும், நுண்ணியிரிகள் முதல் பெரிய உயிரினங்கள் வரையிலான வாழ்விட சூழல்களும் அழிக்கப்படுகின்றன. பருவநிலை மாற்றம், வெப்பமயமாதல் போன்றவற்றால் இயற்கை பாதிப்பிற்குள்ளாகிறது. இதன் காரணமாக, பல்லுயிரிகள் பாதிப்புக்குள்ளாகின்றன. எஞ்சியிருப்பதையாவது பாதுகாத்தால் தான், எதிர்கால உலகம் நாம் வாழத் தகுதியாக இருக்கும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பணத்தைவிட நல்ல கதைகளே முக்கியம்: நடிகை ஈஷா ரெப்பா அதிரடி!

சோளிங்கர் கோயிலுக்கு மலையேறிச் சென்ற பக்தர் உயிரிழப்பு!

முன்கூட்டியே சென்னைக்கு பலமான கடற்காற்று: தமிழ்நாடு வெதர்மேன்

பொய்யை ஆயிரம்முறை சொன்னால்... மோடிக்கு கார்கே விளக்கக் கடிதம்

மாந்திரீகக் கண்ணா?

SCROLL FOR NEXT