கவிதைமணி

மழை நீர் போல: சு.ஜெயக்குமார்

கவிதைமணி

மழை நீர் போல
எதிரிகள் இல்லை
எல்லைகளில்லை
பேதங்கள் இல்லை
பேராசையுமில்லை
மழையின் வாழ்விலே

மாசற்ற பூமகள்
மரணிக்க மாசுபடுத்தும்
மனித குலத்தை மன்னித்து
மாசில்லா நீரினை
மழையே நீ விழைந்து
மகிழ்கிறாய் பொழிந்து
 
மண்ணுலகில் பிறந்து
விண்ணுலகம் சென்று
வீணாகும் மானிடனே
நீ பாழ்படுத்திய
மண்ணில் பிறந்து
விண்ணில் சென்றாலும்
மண்ணுக்குத் திரும்பி
பொன்னுலகு படைக்கும்
மழை நீர் போலாகுமா நீ

தனக்கென சேர்க்காது
தரணிக்கே பரிசளிக்கும்
மழை நீரிடம் கற்க
மானிடனுக்கு ஏனோ
மனமில்லை இன்றளவும்!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT