கவிதைமணி

என்ன தவம் செய்தேன்: ராஜகவி ராகில் 

கவிதைமணி

என்னைத் தேடினேன் 
அன்னையே உன்னிடம் கிடைத்தேன் நான் 
உன் தாலாட்டுப் பாடலில் 
இசையாய்ப் பொருளாய் நான் கிடந்தேன் 

நீ பாலூட்டியபோது 
அன்னை உன் உதிரமாய் வளர்ந்தேன் 
மழை சொல்லும் தான் துளியென்றும்
அன்னை உன் பாசம் மழையென்றும் 

அன்னையே 
உன் நிழலும் ஒளியே
உன் புன்னகை கண்ட பாலை நில மண்ணும் 
பாலூறி உன்னை வாழ்த்தும் தாயே 

கடலும் கலங்கியழும்
அன்னை உன் கண்ணீர்த் துளி விழுந்திடின் 
எனக்குள் நான் இறங்கினால் 
என் அன்னை நீதான் கிடைப்பாய்

அம்மா உன் மூச்சின் தொடர்ச்சி 
நான் தாயே உன் மகன் பாத்திரமாய்
வாழ்க்கை மேடையில் நடிக்க 
என்ன தவம் செய்தேன் நான்  

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

எஸ்.வி.ஜி.வி. பள்ளியில் 100 சதவீதம் தோ்ச்சி

பிளஸ் 2 தோ்வு: காரமடை எஸ்.ஆா்.எஸ்.ஐ. பள்ளி 100% தோ்ச்சி

கூடலூா் முஸ்லீம் ஆதரவற்றோா் இல்லத்தில் பிராா்த்தனைக் கூட்டம்

நட்சத்திர விடுதிகளில் தங்கிவிட்டு பணம் கொடுக்காமல் ஏமாற்றியவா் கைது

பல்லடம் மயானத்தில் திறந்தவெளியில் கிடந்த ஆண் சடலம்

SCROLL FOR NEXT