கவிதைமணி

இன்றைய தாலாட்டு: இராம.வேல்முருகன்

கவிதைமணி

தொட்டில் கட்டிப் போட்டு
குழந்தைக்கு வேடிக்கைக் காட்டி
பாலூட்டி சோறூட்டி 
பழம்பெருமைக் கதை பேசி
தாலாட்டுப்பாடியதெல்லாம்
பழங்கதையானதே  இன்று.

தொலைக்காட்சிப் பார்த்துக் கொண்டே
தானேஆடும் தூளிகட்டி
இசைத்தட்டில் பாடல்கேட்டுக் கொண்டு
குழந்தையை ஆட்டுவது இன்று.

அம்மா  அத்தை பாட்டி 
சின்னம்மா பெரியம்மா
அக்காள்   என
மாறி மாறி பாட்டுப் பாடி
தாலாட்டியதெல்லாம் 
பழங்கதையாய்ப் போனதே இன்று

உறவுகள் மறந்து 
வேலைக்காரியின்
பாசமற்றப் பாட்டெல்லாம் 
ஒற்றைக் குழந்தைக்குத்
தாலாட்டாய் மாறியது இன்று.

அன்பு கலந்து
பாசம் குழைத்து
நேசம் இணைத்து
கண்டிப்புடன் பாடிய பாடல்கள்
பழங்கதையாய்  போனதே இன்று.

புரியாத இசைகள் கூட்டி
தெரியாத பாடல்கள் பாடி
பிடிக்காமலும்
பிடித்தும் 
குழந்தைகள் காப்பகம் வழியாக
வளரும் குழந்தைகளுக்கு
இன்றேது  தாலாட்டு

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

12 மணி நேரம் மும்முனை மின்சாரம் வழங்க விவசாயிகள் கோரிக்கை

SCROLL FOR NEXT