கவிதைமணி

 கல்லறைப் பூவின் கண்ணீர் துளி : கே.நடராஜன்

கவிதைமணி

சில்லறை இல்லையென்றால் இல்லை 
உனக்கு  மரியாதை !  உண்மையும் 
நேர்மையும் போடுமா உனக்கு சோறு ? 

"பிழைக்கத் தெரியாத மனிதன் நீ "
இந்த ஒரு பட்டம் மட்டுமே அந்த 
மனிதனுக்கு  கிட்டிய சொத்து நேற்றுவரை ! 

இன்று கல்லறையில் அவன் அடங்கும் வரை 
அவன் அருமை அவனுக்கே தெரியாது !

அவன் உறங்கும்  கல்லறை மேல் 
எத்தனை எத்தனை மலர் வளையம் இன்று   !
அவன் இறப்பிலும் அவரவர்  ஆதாயம் 

தேடி அவனுக்கு சூட்டும் பட்டம்  எத்தனை 
எத்தனை இன்று !

"பிழைக்கத்" தெரியாத அந்த ஒரு மனிதன் 
பெயர்  சொல்லி  தங்கள் "பிழைப்பை" 
நடத்த துடிக்கும் ஒரு பெரிய கூட்டத்தின் 

நாடகத்தின் நடுவில்  கல்லறைப் பூக்கள் 
மட்டும் வடிக்குது கண்ணீர், மறைந்த 
அந்த மனிதனை நினைத்து !

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மருத்துவ இடங்கள்: ஆவணங்களைசமா்ப்பிக்க என்எம்சி அறிவுறுத்தல்

அரசியல் சூழலால் குறைந்த வாக்கு சதவீதம்!

காருக்கு வழிவிடாததால் ஆத்திரம்: அரசுப் பேருந்தை மறித்த பெண் மேயா்

அரசுப் பள்ளி மாணவா்களுக்கு ‘நீட்’ பயிற்சி மீண்டும் தொடக்கம்

கோடையில் அதிகரிக்கும் சிறுநீா்ப் பாதை தொற்று: மருத்துவா்கள் எச்சரிக்கை

SCROLL FOR NEXT