கவிதைமணி

கல்லறைப்பூவின் கண்ணீர்த்துளி: கவிஞர் கோவிந்தராஜன் பாலு

கவிதைமணி

சோலையிலே பூத்திட்டேன் சொக்கித்தான் நானும்.
சுற்றிவரும் வண்டுகளும் சுவைத்தனவே தேனும்.
மாலையாகக் கோர்த்திட்டார் மகிழ்வாலே வெட்கம்.
மணவறைக்குச் சென்றால் மலர்ந்திடுமே சொர்க்கம்.
மாலையையும் போட்டுவிட்டார் மாண்டவனின் மீது.
மங்கையுமே கதறினாளே மாற்றுவழி
ஏது. ?
பாலையாகி வாழ்க்கையுமே பட்டுத்தான் போகும்.
பாவிமகள் கண்ணீரில் பாழுடம்பு
வேகும்.

பிறக்கின்றோம் மணக்கின்றோம் பெருமையுடன் பூத்து.
பெண்ணினமும் விரும்பிடவே பேருவுவகைக் காத்து.
உறவாக நினைக்கின்றோம் உள்ளன்பு கொண்டு.
உறவுகளைப் பிரிகின்றோம் ஒருநாளில் மாண்டு.
சிறப்பாகப் பூமியிலே செம்மையுடன் வாழ்ந்து.
செய்தக்க நாளெல்லாம் செய்திடுக
ஆழ்ந்து.
பிறவாமை வேண்டிடுவோம் பெற்றவனே வாவா
பெருமையெல்லாம் உன்னருளே
பிறழாமல் தாதா.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தீங்கலுழ் உந்தி: பாட வேறுபாடுகள்

உற்சாக கண்மணி!

பழமொழி நானூறு: முன்றுறையரையனார்

உங்களுக்குப் பிடித்த படம் எது? கேட்பது யாஷிகா ஆனந்த்...

விண்ணப்பித்துவிட்டீர்களா? மத்திய அரசில் 3712 காலியிடங்களுக்கு விண்ணப்பங்கள் வரவேற்பு!

SCROLL FOR NEXT