கவிதைமணி

வீரமங்கை: -ச.கிறிஸ்து ஞான வள்ளுவன்

கவிதைமணி

வெள்ளையரை எதிர்த்தார்
வேலு நாச்சியார்...
முதல் தற்கொலைப் போராளியானார்
வீரப்பெண் குயிலி...
அன்னிய மண்ணிலும் போராடினார்
தில்லையாடி வள்ளியம்மை...
இவர்களின் வீரம்
நாட்டைக் காத்தது !

பெண்மை மென்மையென
காட்டியது போதும்...
நானத்தால் மறைந்து
நின்றது போதும்...

பொதுவெளியில் உரக்கப் பேச
யோசித்தது போதும்...
உண்மைக்கு மட்டுமே பயப்படு
நீ வீரமங்கை மறந்து விடாதே!

குடிகார கணவனிடம் நீ
போராட வேண்டும்...
பழைமைவாதிகளின் பிடியிலிருந்து நீ
விடுபட வேண்டும்...
பெண் பித்தர்களை நீ
மோதி வெற்றி பெற வேண்டும்...
உன்னிடம் உள்ள வீரம் மட்டுமே
உன்னை காக்கும் வீரமங்கையே!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

கொல்கத்தாவுக்கு 154 ரன்கள் இலக்கு நிர்ணயித்த தில்லி கேப்பிடல்ஸ்!

காவல் துறையை தவறாக பயன்படுத்துகிறது பாஜக: ரேவந்த் ரெட்டி

புதுக்கோட்டை: மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியில் மாட்டுச்சாணம் கலக்கப்படவில்லை -ஆய்வில் தகவல்

பார்வை ஒன்றே போதுமே... ஸ்ரேயா சரண்!

கோடை வெயிலின் தாக்கம் எதிரொலி: 8ஆம் வகுப்பு வரை பள்ளிகள் இயங்காது!

SCROLL FOR NEXT