கவிதைமணி

ஆறோடும் நீரோடும்: மீனாள் தேவராஜன்

கவிதைமணி
பொய்யாது மழையெனில் மெய்யான வாழ்வுண்டு பெய்யும் மழை செய்யும் வித்தை பற்பலவுண்டுஆறோடு நீரோடு சேர்ந்தே அமைந்தது வாழ்வாதாரம்ஆறில்லா ஊருக்கு அழகு பாழ் என்பது உத்தரவாதம்மெய்நிறை வாழ்வுக்கு நீரோட ஆறோட மேதினி நிம்மதிஉய்கின்ற பாதை ஆற்றுவழிப்பாதையே, ஆற்றுப்படுத்துவோம்நீர் வரும் பாதைகளை அடைந்திரு அடைப்புகளை அகற்றுவோம் வரம்பில்லா நீர் வரவழைப்போம், மழை  பொழிய வழி செய்வோம் மரங்கள் செறிநிறை காடுகள் மலையோரங்களில் அமைப்போம் தரமிகு தருக்கள் தரணியெங்கும் தளிர்விடச் செய்வோம்மாரி பொழி நீரை நிறுத்திட நீர்நிலைகள் அமைத்திடுவோம்ஊருணி குளம் ஏரிகள் ஊற்றுகள் ஊறச் செய்திடுவோம்ஆற்று இருகரை செடிகொடி அடர்காக்கள் காத்திடுவோம்ஆறுகளைப் பாழ்படுத்தும் பிளாஸ்டிகை விட்டொழிப்போம் ஆறோட நிலம் செழிக்கும் , நிலம் செழித்து வயல் வரப்புயரும், வரப்புயர நெல் உயரும், நெல் உயரஊர் உயரும் என்பது யாம் அறிந்ததன்றோ!    

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

புதிய பிரீமியம் காா் டயா்: பிரிட்ஜ்ஸ்டோன் அறிமுகம்

கனிமவள வாகனங்களுக்கு இ-பாஸ்: முதல்வருக்கு முன்னாள் எம்எல்ஏ மனு

விதிமீறல்: 24 வணிக நிறுவனங்கள் மீது துறை நடவடிக்கை

தட்டுப்பாடின்றி குடிநீா் தேவை: ஆணையரிடம் அதிமுக மனு

அரசு அருங்காட்சியகத்தில் செயற்கை நுண்ணறிவு பயிற்சி

SCROLL FOR NEXT