கவிதைமணி

மேகத்தில் கரைந்த நிலா: திருமலை சோமு

கவிதைமணி

ஒளிமுகம் தான் காட்டி 
ஒளிர்கின்றாய் நீயும்

நிலவொளியில் காயும் 
எங்கள் நினைவுகளை
நீ இல்லாத வேளையில்
எந்த வெளிச்சத்தில் தேடுவோம்..!

தேய்ந்தாலும் வளர்ந்தாலும்
இரவுக்கு துணையாய்
பாதையின் ஒளியாய்
கூடவே நடக்கும்..
தேவதை நீயே..

காதலின் கதையோ..!
கனவுகளின் விதையோ..
எல்லாவற்றையும் உன்னில்
விதைத்தே பழகிப்போன எங்களுக்கு
நீ உலவரும் நேரமே
விடியலாகிறது..

மாதத்தில் ஒருநாள் மறையும்
ஒற்றை நிலா உனை
காணாது இருளுகாமும் 
இந்த பூமியில்..!
தன் காதலியை.
இன்னொரு நிலவெனவே 
காண்கிறான் கவிஞன்!

தேயாதே.. கரையாதே.. மறையாதே..
மனதை விட்டு என்றும் நீ.!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிரஜ்வல் ரேவண்ணாவுக்கு ஓட்டு கேட்ட மோடி மன்னிப்புக்கோர வேண்டும்: ராகுல்

இந்தப் படங்களை அதிகம் விரும்புகிறேன்! சதா...

தரங்கம்பாடியில் சோகம்... வாகனத்தில் சென்ற மூன்று பேர் சாலை விபத்தில் பலி

இச்சை மூட்டும் பச்சை நிறமே...!

கேஜரிவால் கைதைக் கண்டித்து ஆம் ஆத்மி கையெழுத்து இயக்கம்!

SCROLL FOR NEXT