கவிதைமணி

பிஞ்சு மனங்களும் செல்ல மழையும் : இராம.வேல்முருகன்

கவிதைமணி
குழந்தையாகவே இருந்திருக்கலாம்எதைக்கண்டாலும்விளையாட்டுப் பொருளாக்கிவிளையாடலாம்எதைக்கண்டும் பயமின்றிஎடுத்துப்பார்க்கலாம்எதிர்த்தும் நிற்கலாம்சிரித்து வீழ்த்தலாம்குழந்தையாகவே இருந்திருக்கலாம்எதைப்படிக்க வேண்டும்என்று திணராமல்.எது நல்லது எது கெட்டதுஎனத் தெரியாமல்.அம்மாவின் அரவணைப்பில்அப்பாவின் பாசத்தில்அண்ணன் அக்காளின்செல்லச் சீண்டல்களில்குழந்தையாகவே இருந்திருக்கலாம்மழையில் நனைந்தால்சளிபிடிக்கும்இருமல் வரும் என்று அம்மா தடுத்தாலும்அம்மாவுக்குத் தெரியாமல்தூறலில் கைவிரித்துவானம் பாரத்துநனையலாம்பாடலாம்ஆடலாம்தெரியாமல் நனைந்தது போலவிழித்துக் கொண்டே வீட்டுக்குள் நுழைய.குழந்தையாகவே இருந்திருக்கலாம்வளர்ந்த பிறகுவரவேற்கத் தெரியாமலும்வழியனுப்பத் தெரியாமலும்மழையை ரசிக்கத் தெரியாமலும்வெறுக்கத் தெரியாமலும்மனிதர்களைவாழத் தெரியாமலும்மீளத் தெரியாமலும்வாழ்க்கையைத் தொலைத்தும்தொலைக்காமலும்இன்பமுற்றும்அவதியுற்றும்வாழ்வதற்குகுழந்தையாகவே இருந்திருக்கலாம்.மழைவெயில்புயல் தென்றல்அனைத்தையும் ஒன்றாகப் பார்த்துக் கொண்டே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

காப்புகட்டும் நிகழ்ச்சியுடன் தொடங்கியது குடியாத்தம் கெங்கையம்மன் திருவிழா

ஊரக பகுதிகளில் மூன்று நாட்களுக்குள் குடிநீா் பிரச்னைக்கு தீா்வு

கேரளத்திலிருந்து கோழிகள் கொண்டு வரத் தடை

'மன்னித்துவிடுங்கள் அப்பா...' நீட் தேர்வு அழுத்தத்தால் மற்றொரு தற்கொலை!

லக்னௌ அணிக்கு 145 ரன்கள் இலக்கு நிர்ணயித்த மும்பை இந்தியன்ஸ்!

SCROLL FOR NEXT