கவிதைமணி

நதிக்கரையின் நினைவலைகள்: கவிஞர் டாக்டர் எஸ். பார்த்தசாரதி 

கவிதைமணி

நாணமின்றி நடனமாடிய
நாணல்களை காணவில்லையே--
அள்ளிய மணலால்
அரைகுறை ஆடையுடன்
ஆறுகளே ஆடிக்கொண்டிருக்கின்றன –
காட்டுச்செடிகள் மண்டியதால்
காற்று நுழையவே இடமில்லை –
மூங்கில் மரங்களை நினைத்து
ஏங்கிய ஓரங்கள்—
முகமும் முகவரியும்
இழந்த நதிகள் –
இந்த நதிக்கரையில் நீரலைகளா  ?
என்றோ கரைபுரண்டு ஓடிய
தண்ணீரை எண்ணி எண்ணி
நதிக்கரையின் நினைவலைகள்
மட்டும் மிச்சமாய் இன்று --

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

சிபிஎஸ்இ 10,12-ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் எப்போது வெளியிடப்படும்?

பஞ்சாப் கிங்ஸுக்கு அவர்கள் ஸ்டைலில் தக்க பதிலடி கொடுத்த சிஎஸ்கே!

அல்-ஜஸீரா தடை: போர் நிறுத்த பேச்சுவார்த்தையை எவ்வாறு பாதிக்கும்?

உயிர் தமிழுக்கு பட விழா - புகைப்படங்கள்

கண்ணுக்குள்ளே!

SCROLL FOR NEXT