கவிதைமணி

நதிக்கரையின் நினைவலைகள்: பேராசிரியை செ.சுதா ராமு

கவிதைமணி

லீவு விட்டவுடன்
அம்மாவோடு சேர்ந்து
நதிக்கரையில் குளிக்கச்சென்றது;
அக்காவோடு சேர்ந்து
துணிகளை சுமந்து
நீரில் மீன்பிடித்து விளையாடியது;
தோழிகளுடன் சேர்ந்து
ஆற்று மணற்பரப்பில்
வீடு கட்டி மகிழ்ந்தது;
திருமணம் ஆனதும்
ஆடியில் தாலிபெருக்க
நீரேயில்லாத,
மணலேயில்லாத,
காவிரி நதிக்கரைக்கு அழைத்துச்சென்றதும் ;
நதிக்கரையின் நினைவலைகள்
என்னுள் ஏதோ நினைவூட்டியது!
பார்! மகளே!
நீ விளையாடிய என்னுள்
இன்று
லாரியின் சக்கரங்கள் விளையாட;
நீரை விட
மண்ணுக்கே விலை உயர்வென
என்னை தோண்டி விற்றனர்!
உன் சந்ததி விளையாட
நான் இருப்பேனா ?
உன் நினைவுகளில் இருந்தால்
நீயே சொல்லிக்கொடு;
காவிரி 
நதிக்கரையின் வளம் குறித்து!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT