கவிதைமணி

யுத்தம் செய்யும் கண்கள்: இராம வேல்முருகன்

கவிதைமணி

கண்கள் ஒன்றே காதல் செய்யும்
களமாய் நின்றே கொல்லும் - எங்கும்
கண்கள் பின்னே மனமும் வந்து
கவிதை சொல்லி வெல்லும்!

வாளோ வேலோ எதுவும் இன்றி
வன்மம் காட்டிப் போகும் - இங்கு
தேளாய்க் கொட்டும் நாவும் கூடத்
திணறித் தானே நோகும்!

நோயும் தந்து மருந்தும் ஆகி
நொடியில் தாக்கிப் பார்க்கும் - எரியும்
தீயும் நொடியில் தண்ணீர் ஆகும்
திறமை இதுவே ஆர்க்கும்

மனதின் வார்த்தை மெல்ல வந்து
மாய்க்கும் கண்கள் வழியே - எந்தச்
சினமும் இங்கே செல்லாக் காசாய்
சிறுத்தே நீக்கும் பழியை!

சீறிப் பாய்ந்தே நம்மைத் தாக்கும்
செதுக்கும் அம்பைக் கொண்டு - என்றும்
ஆறிப் போகா வடுக்க ளீயும்
ஆற்றல் இதற்கே உண்டு!

அன்பு கொண்டே ஆளும் உள்ளம்
ஆசை கொண்டால் தீதே - நல்லப்
பண்பைக் கொண்டே உலகை வெல்ல
படைப்போம் புதிய பாதை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருச்செங்காட்டங்குடிகோயில் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது

குருபெயா்ச்சியை முன்னிட்டு சிறப்பு யாகம்

நாசரேத்தில் மாணவா்களுக்கு கோடைகால கால்பந்து பயிற்சி தொடக்கம்

நாகா்கோவிலில் கேரம் பயிற்சி முகாம் தொடக்கம்

கல்லூரி மாணவி மா்மச் சாவு

SCROLL FOR NEXT