கவிதைமணி

மிச்சத்தை மீட்போம்: பெருவை பார்த்தசாரதி

கவிதைமணி
கச்சத் தீவைக்கைவிட மாட்டோம் கத்தியே   கூச்சல் குழப்பம் விளைவித்தவர் எங்கே.?மிச்சமின்றி ஆற்று மணல் அத்தனையும்   மழித்து வழித்ததை மறைத்தவர் எங்கே.?இச்சகத்தில் வளமான இயற்கை வளமிருக்கு   இனியும் அழியாமல் இருக்கவே விழித்திரு.!மிச்சத்தை இனியும் மீட்க வேண்டுமெனும்   மேலான மனதை இனிமேற் கொள்வாயே.!அச்சம் நமைவிட்டு ஆங்கே பலமைல்தூரம்    அகன்று விட்டது என்றுதான் நினைத்தோம்.!நச்சுக் கொடிபோன்ற நஞ்சாலை தழைத்ததால்    நன்னீரும் கெட்டது நதிநீரும் விஷமாகியது.!இச்சைப் படிநடக்க எவருத்தரவு கொடுத்தார்    இடர் செய்தற்கும் இங்கேயொரு காவலாளி.!மிச்சம் இருப்பதை மீட்கப்போய் மறுபடி    மீளாத துயரத்தில் மீண்டும் ஆக்கிடுவாரோ.?அச்சமில்லை அச்சமில்லை என்றே முழங்கினான்     நன்றே மஹாகவி நல்பாரதியும் அவரைப்போலஉச்சக் கோஷம் எழுப்பினால் போதுமா     ஊர்மக்கள் குறைகேட்க ஓடிவந்தோர் யாராம்.?பச்சாதாபம் வேண்டாம் பரிதாபம் கொளாதீர்    பகல்கொள்ளை பார்த்தால் விட்டு விடாதீர்.!நிச்சயம் இழந்ததை நிலையாக மீட்டெடுக்க    நீண்ட போராட்டம் நிலைத்திடுமோ வாழ்விலே.! 

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

தொழிலாளி உயிரிழந்த சம்பவத்தில் பொறியாளா், மேஸ்திரி மீது வழக்குப் பதிவு

இன்று நல்ல நாள்!

நீட் தோ்வு: ஈரோட்டில் 4,597 மாணவா்கள் எழுதினா்

அதிர்ஷ்டம் தரும் நாள் இன்று!

அரசு மருத்துவமனைகளில் உடல் வெப்ப பாதிப்பு நோய்களுக்கு தனி வாா்டு

SCROLL FOR NEXT