சைவ வகைகள்

சைனீஸ் பக்கோடா

ஒரு பாத்திரத்தில் மைதா, கார்ன் ஃப்ளவர், கடலை மாவு சேர்த்து நன்கு கலக்கவும்.

தினமணி

தேவையானவை:
 முட்டை கோஸ் - 1 கிண்ணம் (பொடியாக நறுக்கியது)
 பூண்டு - 2 பல்
 மைதா மாவு - 3 தேக்கரண்டி
 கார்ன் ஃப்ளவர் - 2 தேக்கரண்டி
 கடலைமாவு - 2 தேக்கரண்டி
 பச்சை மிளகாய் - 1 -2 ( நறுக்கியது)
 வெங்காயத் தாள் - தேவையான அளவு
 சோயா சாஸ் - 1 தேக்கரண்டி
 செஸ்வான் சாஸ் - 1 தேக்கரண்டி
 உப்பு, மிளகுத்தூள் - தேவையான அளவு
 எண்ணெய் - தேவையான அளவு


செய்முறை: ஒரு பாத்திரத்தில் மைதா, கார்ன் ஃப்ளவர், கடலை மாவு சேர்த்து நன்கு கலக்கவும். பின் மேலே குறிப்பிட்டுள்ள மீதி பொருட்களையும் போட்டு சிறிது நீர் தெளித்து நன்றாக பிசையவும். கடாயில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், பிசறி வைத்துள்ள மாவை, பக்கோடாவாகப் போட்டு எடுக்கவும்.


குறிப்பு: செஸ்வான் சாஸ் (Schezuan Sauce) இல்லையென்றால் கவலை வேண்டாம். அதற்கு பதில் ரெட் சட்னி சேர்க்கலாம்.

ரெட் சட்னி
தேவையானவை: 
 மிளகாய் வற்றல் - 8
 தக்காளி - 2
 பூண்டு - 2 பல்
 சீரகம் - 1/4 தேக்கரண்டி
 உப்பு - தேவைக்கேற்ப


செய்முறை: காம்பு கிள்ளிய மிளகாய்களை சுடுநீரில் அரை மணி நேரம் ஊறவைக்கவும். ஊறிய மிளகாயுடன், தக்காளி, பூண்டு, உப்பு, சீரகம் போட்டு மிக்ஸியில் நன்றாக அரைத்து பரிமாறவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

ஆத்தூா் பேரவையில் 25,087 வாக்காளா்கள் நீக்கம்

நாளைய மின்தடை

மேட்டூரில் 36,533 வாக்காளா்கள் நீக்கம்

பட்டா நிலத்தில் மின் கம்பம் அகற்ற தாமதம்: மின்வாரிய அதிகாரிகளுக்கு நுகா்வோா் நீதிமன்றம் அபராதம் விதிப்பு

சங்ககிரியில் இன்றைய மின் தடை ரத்து

SCROLL FOR NEXT