சைவ வகைகள்

அடை தோசை

தவநிதி

தேவையான பொருட்கள் :

கடலை பருப்பு - ஒரு கிண்ணம்
துவரம் பருப்பு - அரை கிண்ணம்
பச்சரிசி - கால் கிண்ணம்
உளுந்து - ஒரு மேசைக்கரண்டி
மிளகாய் வற்றல் - 5 (காரத்திற்கு ஏற்ப மாற்றிக்
கொள்ளலாம்)
பெருங்காயம் - கால் தேக்கரண்டி
தேங்காய் - கால் மூடி
கறிவேப்பிலை - சிறிதளவு
கொத்துமல்லி இலை - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணெய் - தேவையான அளவு

செய்முறை:

கடலை பருப்பு, துவரம் பருப்பு, பச்சரிசி, உளுந்து எல்லாவற்றையும் சேர்த்து நான்கு மணி நேரம் ஊற வைக்கவும். ஊற வைத்தவற்றுடன் மிளகாய் வற்றல், பெருங்காயம், உப்பு சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ளவும். தேங்காயை சிறு சிறு பல்லாக நறுக்கிக் கொள்ளவும்.

அரைத்த மாவுடன் நறுக்கின தேங்காய், பொடியாக நறுக்கின கறிவேப்பிலை, கொத்துமல்லி இலை ஆகியவற்றை சேர்க்கவும். பின்னர், தோசை கல்லில் தோசை போன்று  ஊற்றி மேலே எண்ணெய் ஊற்றி வெந்ததும் எடுக்கவும். சுவையான அடை தோசை ரெடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

கோவில்பட்டியில் ஆா்ப்பாட்டம்

திருச்செந்தூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி நூறு சதவீத தோ்ச்சி

SCROLL FOR NEXT