சைவ வகைகள்

தூதுவளை புளிக் குழம்பு

தவநிதி

தேவையான பொருட்கள் :
தூதுவளை - 1 கிண்ணம்
புளி - எலுமிச்சை அளவு
சின்ன வெங்காயம் -10
தக்காளி - 2
பூண்டு - 5 பல்
சிவப்பு மிளகாய் -2
வெந்தயம் - அரை தேக்கரண்டி
வெந்தயத் தூள் - அரை தேக்கரண்டி
மஞ்சள் தூள் - கால் தேக்கரண்டி
மிளகாய்த் தூள் - 1 தேக்கரண்டி
எண்ணெய் - 2 தேக்கரண்டி
உப்பு - தேவைக்கேற்ப.

செய்முறை:

தூதுவளையை முள் நீக்கி, ஆய்ந்து சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும். புளியில் சிறிது தண்ணீர் விட்டு கெட்டியாகக் கரைத்து வைக்கவும். வெங்காயம், பூண்டை தோல் நீக்கி வைக்கவும். வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்த மிளகாய் தாளித்து, வெந்தயம் சேர்க்கவும். வெங்காயம், பூண்டு சேர்த்து சில நிமிடங்கள் வதக்கவும்.

வெங்காயம் பொன்னிறமானதும் பொடியாக நறுக்கிய தக்காளி சேர்த்துக் கரையும் வரை வதக்கவும். பிறகு தூதுவளை சேர்த்து வதக்கி, புளிக்கரைசல் விடவும். மஞ்சள் தூள், மிளகாய்த் தூள், உப்பு சேர்க்கவும். குறைந்த தணலில் குழம்பு நன்கு கொதிக்கட்டும். கொதித்து கெட்டியானதும், வெந்தயத்தூள் சேர்த்து இறக்கினால் சுவையான தூதுவளை புளிக் குழம்பு ரெடி.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

விமானப் பயணம் போக வேண்டுமா?

நெல் பயிரிடப்பட்ட வயல்களை பச்சைப் பாசி பாதிப்பில் இருந்து பாதுகாக்கும் வழிமுறைகள்

ஸ்ரீமுத்தாலம்மன் கோயில் தோ்த் திருவிழா

மழை வேண்டி இஸ்லாமியா்கள் சிறப்புத் தொழுகை

கோடைகால கிரிக்கெட் போட்டி தொடக்கம்

SCROLL FOR NEXT