நாள்தோறும் நம்மாழ்வார்

முதற்பத்து நான்காம் திருவாய்மொழி - 7

செ.குளோரியான்

என்பு இழை கோப்பதுபோலப் பனிவாடை ஈர்கின்றது,
என் பிழையே நினைந்துஅருளி அருளாத திருமாலார்க்கு
என்பிழைத்தாள் திருவடியின் தகவினுக்கு என்று ஒரு வாய்ச்சொல்,
என்புஇழைக்கும் இளங்கிளியே, யான்வளர்த்த நீஅலையே?

நான் வளர்த்த இளங்கிளியே, உன்னைப் பார்க்கும்போது எனக்கு எம்பெருமானின் நினைவுதான் வருகிறது, ஆகவே, என் எலும்பெல்லாம் சிதைந்துபோகிறது,

இன்னொருபக்கம், பனிவாடைக்காற்று எலும்பிலே நூலை நுழைப்பதுபோல் வருத்துகிறது,

ஆகவே, எனக்காக நீ ஓர் உதவி செய், நான் செய்த பிழைகளையே எண்ணிக்கொண்டு எனக்கு அருள்செய்யாமலிருக்கும் திருமாலிடம் சென்று என் நிலைமையைச் சொல், 'அவள் அப்படி என்ன பிழை செய்துவிட்டாள்?' என்று பேசி எனக்கு அருளச்சொல்,

நான் வளர்த்த கிளியே, நீதான் இவற்றை எனக்காகச் செய்ய வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நீதானே பொன் வசந்தம்.. சமந்தா பிறந்தநாள்!

குகேஷுக்கு ரூ.75 லட்சம் ஊக்கத்தொகை வழங்கினார் முதல்வர்

வெங்கடேஷ் பட்டின் புதிய சமையல் நிகழ்ச்சி அறிவிப்பு!

ஐஸ்வர்யம்..!

மணிப்பூரில் 6 வாக்குச்சாவடிகளில் ஏப்.30ல் மறு வாக்குப் பதிவு

SCROLL FOR NEXT