நாள்தோறும் நம்மாழ்வார்

நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி - பாடல் 74

நாள்தோறும் நம்மாழ்வார்

என்றும் ஒருநாள் ஒழியாமை யான்இரந்தால்,
ஒன்றும் இரங்கார், உருக்காட்டார், குன்று
குடையாக ஆ காத்த கோவலனார், நெஞ்சே,
புடைதான் பெரிதே புவி.

நெஞ்சே,

நான் ஒவ்வொருநாளும் எம்பெருமானை வணங்குகிறேன், அவருக்குத் தொண்டுசெய்யும் வாய்ப்பைக் கோருகிறேன்,

ஆனால் அவரோ, என்மீது இரக்கம் காட்டவில்லை, தன்னுடைய திருவுருவை எனக்குக் காண்பித்து அருளவில்லை.

குன்றைக் குடையாகப் பிடித்துப் பசுக்களையெல்லாம் காத்த கோவலனார் எம்பெருமான், அவருடைய அருள்வெள்ளம் பாயாத மேட்டுநிலத்தில் நாம் இருக்கிறோமோ?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

5-ம் கட்டத் தேர்தல்: மகனுடன் சென்று வாக்கு செலுத்திய சச்சின் டெண்டுல்கர்

தந்தையுடன் வாக்களித்த நடிகை குஷி கபூர்!

ரேபரேலி வாக்குச் சாவடியில் ராகுல் ஆய்வு!

சிறுபான்மையினருக்கு எதிராக ஒரு வார்த்தைகூட பேசியதில்லை: மோடி

ரூ.263 கோடி வரி மோசடி: கைது செய்த அமலாக்கத்துறை!

SCROLL FOR NEXT