நாள்தோறும் நம்மாழ்வார்

நம்மாழ்வார் பெரிய திருவந்தாதி பாடல் - 58

நாள்தோறும் நம்மாழ்வார்


மாலே, படிச்சோதி மாற்றேல், இனிஉனது
பாலேபோல் சீரில் பழுத்துஒழிந்தேன், மேலால்
பிறப்புஇன்மை பெற்று அடிக்கீழ்க் குற்றேவல்அன்று,
மறப்புஇன்மை யான்வேண்டும் மாடு.

திருமாலே,

பால்போன்ற தூய்மையான உன்னுடைய சிறப்புகளை எண்ணி நான் திளைக்கிறேன், உனது பிரகாசமான திருமேனியின் ஒளியை நான் என்றைக்கும் பார்த்துக்கொண்டே இருக்க வேண்டும், அதனை மாற்றிவிடாதே!

இனி மறுபடியும் பூமியில் பிறக்காமல், உன்னுடைய திருவடியிலே அமர்ந்து உனக்குத் தொண்டு செய்ய வேண்டும் என்பதைவிட, உன்னை என்றைக்கும் மறக்காமல் இருக்க வேண்டும் என்பதுதான் என்னுடைய ஆசை, அதுவே நான் விரும்பும் செல்வம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்றைய நாள் உங்களுக்கு எப்படி?

மக்களவை 3-ஆம் கட்ட தோ்தல்: வாக்குப் பதிவு தொடங்கியது!

மக்களவைத் தோ்தல்: கா்நாடகத்தில் 14 தொகுதிகளுக்கு இன்று இரண்டாம் வாக்குப் பதிவு: களத்தில் 227 வேட்பாளா்கள்

சமூக வலைதளப் பதிவு: ஜெ.பி.நட்டாவுக்கு எதிராக வழக்கு

தூத்துக்குடி மாவட்டத்தில் 96.39% தோ்ச்சி

SCROLL FOR NEXT