நாள்தோறும் நம்மாழ்வார்

நான்காம் பத்து எட்டாம் திருவாய்மொழி - பாடல் 11

செ.குளோரியான்

பாடல் - 11

உயிரினால் குறை இல்லா உலகு ஏழ் தன் உள் ஒடுக்கித்
தயிர், வெண்ணெய் உண்டானைத் தடம் குருகூர்ச் சடகோபன்
செயிர் இல் சொல் இசைமாலை ஆயிரத்துள் இப்பத்தால்
வயிரம் சேர் பிறப்பு அறுத்து வைகுந்தம் நண்ணுவரே.

உயிர்கள் நிறைந்த ஏழு உலகங்களையும் தனக்குள் ஒடுக்கிக்கொண்டு, சிறு குழந்தையாகப் பிறந்து தயிர், வெண்ணெய் உண்டவன் எம்பெருமான், அப்பெருமானை, உயர்ந்த குருகூர்ச் சடகோபன் குற்றமில்லாத சொற்களால் ஆன இசைப்பாடல்கள் ஆயிரத்தில் போற்றிப் பாடினார், பாமாலை சூட்டினார், அவற்றில் இந்தப் பத்து பாடல்களையும் பாடுகிறவர்கள், வலுவான பிறப்பு, இறப்புச் சுழலை அறுத்து வைகுந்தம் சென்றுசேர்வார்கள். (பிறவாப் பெருநிலையை அடைவார்கள்.)

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ரோமியோ ஓடிடி தேதி!

தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் பதிவான மழைப்பொழிவு விவரம்!

நெல்லை மாவட்ட காங்கிரஸ் நிர்வாகி ஜெயக்குமாரின் உடல் நல்லடக்கம்

சென்னை-மும்பை ரயில்(22160) இன்று 10.15 மணி நேரம் தாமதமாகப் புறப்படும்

குக் வித் கோமாளியிலிருந்து விலகிய பிரபலம்: இனி இவர்தான்!

SCROLL FOR NEXT