நாள்தோறும் நம்மாழ்வார்

இரண்டாம் பத்து நான்காம் திருவாய்மொழி - பாடல் 9

செ.குளோரியான்

பட்டபோது, எழுபோது அறியாள், விரை
மட்டுஅலர் தண்துழாய்என்னும், சுடர்,
வட்டவாய், நுதி நேமியீர், நுமது
இட்டம் என்கொல் இவ் ஏழைக்கே.

ஒளிவீசுகிற, வட்டமான வாய், நுனியைக்கொண்ட சக்ராயுதத்தை ஏந்தியவரே,

இந்தப்பெண் உங்களையே எண்ணிக்கொண்டிருக்கிறாள், சூரியன் எப்போது எழுகிறது, எப்போது மறைகிறது என்பதைக்கூட இவள் அறிவதில்லை, நாள்கள் ஓட ஓட, உங்கள் பெயரையே சொல்லிக்கொண்டிருக்கிறாள், மணம்வீசுகிற, தேன்நிறைந்த, குளிர்ச்சியான உங்கள் துளசி மாலையையே எப்போதும் எண்ணுகிறாள், இந்த அறியாப்பெண்ணுக்கு நீங்கள் எவ்வாறு அருள்செய்ய எண்ணியுள்ளீர்கள்?

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

உத்தரகாண்ட் வனப்பகுதிகளில் காட்டுத்தீ! விமானப்படை உதவியுடன் தீயைக் கட்டுப்படுத்த நடவடிக்கை

பஞ்சாப் - கேகேஆர் போட்டி குறித்து அஸ்வின் வைரல் பதிவு!

தமிழ்நாட்டுக்கு நிதியும் கிடையாது, நீதியும் கிடையாது: முதல்வர் ஸ்டாலின்

ராமம் ராகவம் படத்தின் டீசர் வெளியீடு - புகைப்படங்கள்

மறுவெளியீடாகும் ’நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்’!

SCROLL FOR NEXT