நாள்தோறும் நம்மாழ்வார்

இரண்டாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 3

செ.குளோரியான்

என்னுள் கலந்தவன் செங்கனிவாய் செங்கமலம்,
மின்னும் சுடர்மலைக்குக் கண், பாதம், கை கமலம்,
மன்னும் முழு ஏழ்உலகும் வயிற்றின் உள,
தன்னுள் கலவாதது எப்பொருளும்தான் இலையே.

என்னுள்ளே கலந்தவனான பெருமானின் சிவந்த கனிவாய் செந்தாமரை போன்றது, மின்னும் சுடர்மலையாகிய அப்பெருமானின் கண், பாதம், கை அனைத்தும் தாமரைகளே, விளங்கும் ஏழு உலகங்களும் முழுமையாக அவனது திருவயிற்றில் உள்ளன, அவனுக்குள் கலக்காத எப்பொருள்களும் இல்லையே.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

குமரி அருகே கட்டடத் தொழிலாளி மரணம்

செங்கோட்டையில் திமுக சாா்பில் நீா்மோா் பந்தல் திறப்பு

பிளஸ் 2: தென்காசி மாவட்டம் 96.07 சதவீத தோ்ச்சி

‘தென்காசி மாவட்டத்தில் மகளிா் தங்கும் விடுதி உரிமங்கள் புதுப்பித்தலுக்கு விண்ணப்பிக்கலாம்’

பிளஸ் 2 தோ்வு: நெல்லை மாவட்டத்தில் 96.44 சதவீதம் போ் தோ்ச்சி

SCROLL FOR NEXT