நாள்தோறும் நம்மாழ்வார்

இரண்டாம் பத்து ஐந்தாம் திருவாய்மொழி - பாடல் 6

செ.குளோரியான்

பலபலவே ஆபரணம், பேரும் பலபலவே,
பலபலவே சோதி வடிவு, பண்பு எண்ணில்,
பலபல கண்டு, உண்டு, கேட்டு, உற்று, மோந்து இன்பம்,
பலபலவே ஞானமும் பாம்புஅணை மேலாற்கே ஓ!

பாம்புப் படுக்கையிலே திருத்துயில் கொள்கின்ற பெருமானின் பண்புகளை எண்ணிப் பார்த்தால், அவன் அணிந்துள்ள ஆபரணங்கள் பலவிதமானவை, அவனுக்கிருக்கும் பெயர்களும் பலவிதமானவை, அவனது சோதி வடிவங்களும் பலவிதமானவை, அவன் தரும் இன்பங்களும் பலவிதமானவை, அவற்றைக் கண்டு, உண்டு, கேட்டு, தொட்டு, முகர்ந்து அனுபவிக்கலாம்.

இத்தகைய பெருமான் அருள்கிற ஞானங்களும் பலவிதமானவை!

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

திருநள்ளாறு கோயிலில் குவிந்த பக்தா்கள்

பெருந்துறையில் ரூ.1.88 கோடிக்கு கொப்பரை ஏலம்

போராட்டக்காரா்களை அப்புறப்படுத்தும் விவகாரம்: உயா்நீதிமன்ற உத்தரவுக்கு உச்ச நீதிமன்றம் தடை

இன்றைய ராசி பலன்கள்!

வேளாளா் பொறியியல் கல்லூரியில் 23-ஆவது ஆண்டு விழா

SCROLL FOR NEXT