நாள்தோறும் நம்மாழ்வார்

பத்தாம் பத்து மூன்றாம் திருவாய்மொழி - பாடல் 4

செ.குளோரியான்


பாடல் 4

தொழுத்தையோம் தனிமையும், துணை பிரிந்தார்
துயரமும் நினைகிலை, கோவிந்தா, நின்
தொழுத்தனில் பசுக்களையே விரும்பி,
துறந்து எம்மை இட்டு அவை மேய்க்கப் போதி,
பழுத்த நல் அமுதின் இன் சாற்று வெள்ளம்
பாவியேன் மனம் அகம்தோறும் உள்புக்கு
அழுத்த, நின் செங்கனி வாயின் கள்வப்
பணிமொழி நினைதொறும் ஆவி வேம்ஆல்.

கோவிந்தா, அடிமைகளாகிய எங்களுடைய தனிமையையும், துணையைப் பிரிந்து வாடுகிற எங்களுடைய துயரத்தையும் நீ நினைப்பதில்லை, தொழுவத்திலுள்ள உன்னுடைய பசுக்களைதான் விரும்புகிறாய், எங்களை விட்டுவிட்டு அவற்றை மேய்க்கச் செல்கிறாய், பழுத்த நல்ல அமுதத்தின் இனிய சாறு வெள்ளமாகப் பாய்ந்து வருவதுபோல உன்னுடைய பேச்சு, அது பாவியாகிய என்னுடைய உள்ளத்தில் நுழைந்து ஒவ்வோர் இடத்திலும் அழுத்துகிறது, உன்னுடைய செங்கனிபோன்ற திருவாயிலிருந்து வரும் கள்வத்தனமான சொற்களை நினைக்கும்போதெல்லாம் என் உயிர் வேகிறது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மது போதையில் அரசுப் பேருந்தை இயக்கிய ஓட்டுநர்! பேருந்தை நிறுத்திய பயணிகள்!

சவுக்கு சங்கர் மீது சேலத்திலும் வழக்குகள் பதிவு!

ஜனநாயகம், அரசியலமைப்பைப் பாதுகாக்க வாக்களிப்போம்: ராகுல், பிரியங்கா

எங்கே செல்வது? கதறும் பாலஸ்தீன மக்கள்!

ஹவாலா முறையில் ரூ.100 கோடி.. கேஜரிவால் வழக்கில் அமலாக்கத் துறை அடுக்கும் ஆதாரங்கள்

SCROLL FOR NEXT