நாள்தோறும் நம்மாழ்வார்

எட்டாம் பத்து முதல் திருவாய்மொழி - பாடல் 11

செ.குளோரியான்


பாடல் - 11

பெரிய அப்பனை, பிரமன் அப்பனை, உருத்திரன்
                                அப்பனை, முனிவர்க்கு
உரிய அப்பனை, அமரர் அப்பனை, உலகுக்கு
                                 ஓர் தனி அப்பன்தன்னை,
பெரிய வண் குருகூர் வண் சடகோபன் பேணின
                                 ஆயிரத்துள்ளும்
உரிய சொல்மாலை இவையும் பத்து, இவற்றால்
                                  உய்யலாம் தொண்டீர் நங்கட்கே.

உயர்வான அப்பன், பிரமன், உருத்திரன், முனிவர்கள், அமரர்கள், இந்த உலகம் என
அனைவருக்கும், அனைத்துக்கும் அப்பன், ஈடு இணையற்றவன், எம்பெருமான், அத்தகைய பெருமானை, பெரிய, வளமான குருகூரைச் சேர்ந்த வண்மையுடைய சடகோபர் ஆயிரம் திருப்பாடல்களால் பாடினார், எம்பெருமானுக்கு உரிய அந்தச் சொல்மாலையிலே இந்தப் பத்து பாடல்களையும் பாடும் தொண்டர்கள் உய்வார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

டி20 உலகக் கோப்பை: கனடாவின் அணி அறிவிப்பு!

பவுனுக்கு ரூ.640 உயர்ந்த தங்கம் விலை!

வேட்புமனுவுக்கு நாளையே கடைசி: அமேதி, ரே பரேலி வேட்பாளர்கள் யார்?

வாக்கு எண்ணிக்கை மையப் பணி: தலைமைக் காவலர் விபத்தில் பலி

கல்குவாரி வெடி விபத்து: மேலும் ஒருவர் கைது

SCROLL FOR NEXT