நாள்தோறும் நம்மாழ்வார்

ஏழாம் பத்து ஆறாம் திருவாய்மொழி - பாடல் 11

செ.குளோரியான்


பாடல்- 11

புக்க அரி உருவாய் அவுணன் உடல் கீண்டு உகந்த
சக்கரச் செல்வன்தன்னைக் குருகூர்ச் சடகோபன் சொன்ன
மிக்க ஓர் ஆயிரத்துள் இவை பத்தும் வல்லார் அவரைத்
தொக்குப் பல்லாண்டு இசைத்துக் கவரிசெய்வர் ஏழையரே.

சிறந்த சிங்க வடிவம் எடுத்துப் புகுந்து இரணியனின் உடலைக் கிழித்து மகிழ்ந்த
நரசிம்மப்பெருமான், சக்ராயுதத்தை ஏந்திய செல்வன், அப்பெருமானைக் குருகூர்ச் சடகோபன் மேம்பட்ட ஆயிரம் திருப்பாடல்களிலே பாடினார், அவற்றுள் இந்தப் பத்து பாடல்களையும் சொல்ல வல்லவர்களைப் பெண்கள் ஒன்றாகக் கூடிப் பல்லாண்டு இசைத்துக் கவரி வீசி வாழ்த்துவார்கள்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஆப்பிளின் புதிய ஐபேட் விலை எவ்வளவு தெரியுமா?

மிட்செல் மார்ஷ் உலகக் கோப்பைக்குத் தயாரா? பயிற்சியாளர் கொடுத்த அப்டேட்!

ஜேக் ஃப்ரேசர், அபிஷேக் போரெல் அசத்தல்; ராஜஸ்தானுக்கு 222 ரன்கள் இலக்கு!

பிளஸ் 2 துணைத்தேர்வு: மே 16 முதல் விண்ணப்பிக்கலாம்

அஸ்ஸாம்- 75.01; மகாராஷ்டிரம்- 53.95.. : 3-ம் கட்ட வாக்குப்பதிவு சதவிகிதம்!

SCROLL FOR NEXT